sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'கூட்டணிக்காக நாங்கள் அலைந்ததாக வரலாறு இல்லை' - நேற்றுமுன்தினம் 'ஒருவிரல் புரட்சி' மூலம் தி.மு.க.,வை அகற்ற வேண்டும் - நேற்று சொன்னது விஜய்க்கு செல்லுார் ராஜூ மறைமுகமாக அழைப்பு

ADDED : அக் 25, 2025 05:52 AM

Google News

ADDED : அக் 25, 2025 05:52 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''அ.தி.மு.க., எந்த காலத்திலும் கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறு இல்லை'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ நேற்றுமுன்தினம் பேசிய நிலையில், 'ஒரு விரல் புரட்சி செய்து தி.மு.க., அரசை அகற்ற வேண்டும்' என விஜயின் படப்பாடல் வரியை குறிப்பிட்டு த.வெ.க.,வுக்கு நேற்று மறைமுகமாக அழைப்பு விடுத்தார்.

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க., என நான்கு முனைப்போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. கரூர் விவகாரத்திற்கு பிறகு த.வெ.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் மறைமுகமாக அழைப்பு விடுத்து வருகின்றன. பழனிசாமியின் பிரசார பயணத்தில் த.வெ.க., கொடியுடன் அக்கட்சி தொண்டர்கள் சிலர் பங்கேற்றனர். சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரான உதயகுமார், 'ஆந்திராவில் பவன் கல்யாண் போல் நல்ல முடிவை எடுக்க வேண்டும்' என விஜய்க்கு 'அட்வைஸ்' செய்தார்.

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., சேருமா அல்லது த.வெ.க., தலைமையில் புதிய கூட்டணி அமையுமா என விவாதம் நடக்கும் நிலையில், நேற்றுமுன்தினம் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, 'கூட்டணிக்கு அ.தி.மு.க., அலைந்ததாக வரலாறே கிடையாது. எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் யாரையும் வம்பாக கூட்டணிக்கு அழைத்தது இல்லை.

எங்களுக்கு துணையாக தமிழக மக்களை காப்பாற்ற யார் துணை வந்தாலும் அவர்களை துாக்கி கொண்டாடுவோம். பிற கட்சிகளுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்த்து அரசியல் செய்ய தெரியவில்லை. தமிழகமே இவர்களால் தான் கேட்டுப் போய்விட்டது'' என்றார்.

'விஜயைதான் மறைமுகமாக காய்ச்சி எடுக்கிறார்' என தொண்டர்கள் கருதினர். இந்நிலையில் நேற்று பேட்டியளித்த செல்லுார் ராஜூ, 'தேர்தலில் தி.மு.க.,விற்கு சரியான பதிலை ஒரு விரல் புரட்சி மூலமாக மக்கள் கொடுக்க வேண்டும்' என்றார். விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தில் ஒருவிரல் புரட்சி பாடல் இடம்பெற்றுள்ளது.

'தி.மு.க.,விற்கு எதிராக சொல்ல எத்தனையோ வார்த்தைகள் இருக்கும்போது விஜயின் 'ஒருவிரல் புரட்சி' என்ற வரியை செல்லுார் ராஜூ சொல்ல வேண்டிய அவசியம் ஏன். இதன்மூலம் அவரும் அ.தி.மு.க., கூட்டணியில் சேர விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றே கணிக்க முடிகிறது' என்கின்றனர் த.வெ.க.,வினர்.

      Dinamalar
      Follow us