/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமூகநீதி பேசும் கூட்டணிக்குள் சமூகநீதி இல்லை: நயினார் நாகேந்திரன் * பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல்
/
சமூகநீதி பேசும் கூட்டணிக்குள் சமூகநீதி இல்லை: நயினார் நாகேந்திரன் * பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல்
சமூகநீதி பேசும் கூட்டணிக்குள் சமூகநீதி இல்லை: நயினார் நாகேந்திரன் * பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல்
சமூகநீதி பேசும் கூட்டணிக்குள் சமூகநீதி இல்லை: நயினார் நாகேந்திரன் * பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல்
ADDED : அக் 25, 2025 05:52 AM
அவனியாபுரம்: 'காங்., மாநில தலைவர் செல்வப் பெருந்தகையின் அறிக்கையில், தான் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை எனக் கூறியுள்ளார். சமூகநீதி பற்றி பேசுவோர் கூட்டணிக்குள் சமூகநீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும்' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகளவில் பெருகி வருகிறது. பொது மக்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பாகும். இதன் மூலம் தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
நெல் கொள்முதல் பிரச்னை குறித்து எந்த விவசாயியும் புகார் செய்யவில்லை என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். விவசாயிகள் யார் மீது புகார் கொடுக்க முடியும்.
மூடைக்கு ரூ. 40 கமிஷன் கேட்கிறார்கள். தமிழகம் முழுவதும் பயிருக்காக ரூ. 5000 கோடி செலவு செய்ததாக கூறுகின்றனர். எங்கே செலவு செய்தார்கள் என்பது தான் கேள்வி.
இதுகுறித்து முதல்வரிடம் கேட்டால் 95 சதவீதம் வேலையை முடித்து விட்டோம். ஐந்து சதவீதம் மட்டுமே பாக்கி என்று கூறுகின்றனர். ரூ. 5000 கோடியில் 95 சதவீத பணிகள் எங்கே முடிந்தது என விளக்கமாக அவர்களால் கூற முடியாது. தமிழகத்திற்கு மத்திய அரசு குழு வந்துள்ளது. அவர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வார்கள்.
13 ஆயிரம் ஓட்டுக்கள் நீக்கம் சென்னையில் ஒரு தொகுதியில் 13 ஆயிரம் ஓட்டுகள் ஏற்கனவே நீக்கப்பட்டு இருக்கிறது. அதில் தமிழக அமைச்சர்கள் தலையிட்டு இருக்கிறார்கள். பீகாரில் வாக்காளர்களை நீக்குவதை குறை கூறினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கொளத்துார் தொகுதியில் 9000 ஓட்டுகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான ஆதாரம் உள்ளது. இன்று ஆளும் கட்சியாக இருப்பவர்கள் நாளை எதிர்க்கட்சியாக போகிறார்கள். அவர்கள்தான் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றனர்.
வழக்கறிஞர் தாக்குதல் விவகாரத்தில் செய்தியை பார்த்து தான் எனக்கு தெரியும் என வி.சி.க., தலைவர் திருமாவளவன் அன்று ஒரு வேகத்தில் கூறிவிட்டார். அன்று திருமாவளவன் நாங்கள் லேசாகத்தான் தட்டினோம். நல்லா அடிக்கவில்லை என்று கூறினார். தேர்தல் வருகிறது அப்போது நிச்சயம் இதற்கு நல்ல பதில் கிடைக்கும்.
சமூக நீதி குறித்து தி.மு.க., பேசுகிறது. ஆனால் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அதில் தான் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை எனக் கூறியுள்ளார். சமூகநீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூகநீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றார்.

