/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் 'லாண்டரி சர்வீஸ்க்கு' இடமில்லை; கேள்விக்குறியாகும் 7 நாள்... 7 வண்ணங்கள்...
/
மதுரை அரசு மருத்துவமனையில் 'லாண்டரி சர்வீஸ்க்கு' இடமில்லை; கேள்விக்குறியாகும் 7 நாள்... 7 வண்ணங்கள்...
மதுரை அரசு மருத்துவமனையில் 'லாண்டரி சர்வீஸ்க்கு' இடமில்லை; கேள்விக்குறியாகும் 7 நாள்... 7 வண்ணங்கள்...
மதுரை அரசு மருத்துவமனையில் 'லாண்டரி சர்வீஸ்க்கு' இடமில்லை; கேள்விக்குறியாகும் 7 நாள்... 7 வண்ணங்கள்...
ADDED : ஜூலை 31, 2025 03:05 AM

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை தினமும் துவைத்து சுத்தம் செய்வதற்கான கருவிகள் இருந்தாலும் போதுமான இடவசதி இல்லாததால், துணிகள் காய்ந்த பின்பே அடுத்தடுத்து உலர்த்தப்படுகிறது.
மருத்துவமனை பழைய வளாகம், பல்நோக்கு சிறப்பு (எஸ்.எஸ்.பி.,) வளாகத்திலும் தீவிர சிகிச்சை பிரிவு (டி.சி.சி.,) வளாகத்திலும் தனித்தனியாக 'லாண்டரி சர்வீஸ்' நிலையங்கள் செயல்படுகின்றன. பழைய வளாகத்தில் 100 கிலோ எடையளவு துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷின் நான்கும், 50 கிலோ அளவு வாஷிங்மெஷின் ஒன்றும் இங்குள்ளது.
ஒரே நேரத்தில் 50 கிலோ துணிகளின் ஈரத்தை பிழிந்து தரும் ஹைட்ரோ எக்ஸ்ட்ராட்டர்' இயந்திரம் மூன்று, துணிகளை உலர்த்தும் 25 கிலோ எடையளவு இயந்திரங்கள் இரண்டு, ஒரு 50 கிலோ இயந்திரம் உள்ளது.
புதிதாக 100 கிலோ வாஷிங் மெஷின், 50 கிலோ பிழியும் இயந்திரம், 25 கிலோ உலர்த்தும் மெஷின், துணிகளை அயர்ன் செய்யும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
உள் நோயாளிகளுக்கான வார்டுகளில் வாரத்தில் ஏழு நாட்கள் ஏழு வண்ணங்களில் படுக்கை விரிப்புகள் மாற்றப்படுகிறது.
தினமும் குறைந்தது 1500 படுக்கை விரிப்புகள் துவைப்பதற்காக கொண்டு வரப்படுகிறது. கருவிகள் வைப்பதற்கே நெருக்கடியான 'லாண்டரி' நிலையத்தில் துணிகளை காய விடுவதற்கு வசதியில்லை. இங்குள்ள தரைத்தளம் பள்ளம் மேடாக எந்நேரமும் தண்ணீர் தேங்கி சகதியாகவும் முட்புதர்களுடன் காணப்படுகிறது.
இதனால் துணிகளை தரையில் காயவிட முடியாது. காயவிடுவதற்காக ஊன்றப்பட்டுள்ள கல்துாண்கள் துருப்பிடித்து முறிந்துள்ளது. அருகிலுள்ள அறையை காலி குளுக்கோஸ் பாட்டில்களை சேகரிப்பதற்காக வைத்துள்ளனர். இந்த அறையை காலி செய்து கொடுத்தால் மழைக்காலத்தில் துணிகளை எளிதில் காயவிடலாம். மேலும் தரைத்தளத்தை சமப்படுத்தி தரவேண்டும். மேலும் 35 பேர் வேலை பார்த்த இடத்தில் தற்போது மூன்று நிலையங்களுக்கும் சேர்த்தே 15 பேர் தான் உள்ளனர்.
விடுமுறை நாட்களை கழித்து ஒவ்வொருவரும் கூடுதல் சுமையால் அவதிப்படுவதால் கூடுதலாக 15 தற்காலிக பணியாளர்களை தனியார் நிறுவனம் மூலம் மருத்துவமனை நிர்வாகம் நியமிக்க வேண்டும்.