/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிதியிருக்கு... இடமில்லையே n மினி ஸ்டேடியம் அமைக்க வழியின்றி பரிதவிப்பு n மதுரை மேற்கு, மத்தி, தெற்கு, திருப்பரங்குன்றத்தில்

ADDED : அக் 16, 2024 04:05 AM
மதுரை, அக். 16- மதுரையில் உள்ள ஒன்பது தொகுதிகளில் மதுரை மேற்கு, மத்தி, தெற்கு, திருப்பரங்குன்றத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிட்டு இரண்டாண்டுகளாகியும் தற்போது வரை இடம் கிடைக்கவில்லை.
மதுரை உள்ள 10 தொகுதிகளில் வடக்கு தொகுதியில் ரேஸ்கோர்ஸ் மைதானம் செயல்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மீதியுள்ள ஒன்பது தொகுதிகளில் தலா ரூ. 3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஸ்டேடியமும் 6 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும் என்பதால் இடம் தேர்வுக்கு அதிகாரிகள் மெனக்கெட்டு வருகின்றனர். மதுரை கிழக்கு தொகுதியில் சக்கிமங்கலத்திலும், உசிலம்பட்டியில் சீமானுாத்து, மேலுாரில் அய்யாபட்டி, திருமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி என தொகுதிவாரியாக மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. சோழவந்தான் தொகுதிக்கு சின்ன இலந்தைகுளத்தில் 6 ஏக்கர் இடத்தேர்வு முடிந்து தற்போது மினி ஸ்டேடியத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன.
200 மீட்டர் மண் தடகள டிராக், வாலிபால், கூடைப்பந்து, கபடி விளையாட்டு அரங்குகள், பார்வையாளர்களுக்கான சிறிய காலரி, நிர்வாக அலுவலக கட்டடம், கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் கட்டப்பட உள்ளன. அனைத்து மினி ஸ்டேடியத்திலும் இதேபோன்று வசதிகள் செய்யப்படும். ஆனால் இதுவரை மதுரை மேற்கு, மத்தி, தெற்கு, திருப்பரங்குன்றத்தில் இடம் கிடைக்காமல் அதிகாரிகள் பரிதவிக்கின்றனர்.
மினி ஸ்டேடியம் அமைந்தால் அந்தந்த தொகுதியில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எளிதாக தடகள பயிற்சி பெறமுடியும். இதற்காக ரேஸ்கோர்ஸ் மைதானம் வரவேண்டியது இல்லை. பள்ளிக்கல்வித்துறை நடத்தும் குறுவட்ட அளவிலான தடகள, வாலிபால், கபடி, கூடைப்பந்து போட்டிகளையும் அங்கேயே நடத்த முடியும். இந்த நான்கு தொகுதிகளிலும் இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் மனது வைக்க வேண்டும் என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றனர்.