/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாள் கிளப்புறாங்க: டில்லிக்கு போட்டியாக மதுரையில் காற்று மாசு: ரோடுகளில் எழுகின்ற புழுதிதான் காரணமாம்
/
துாள் கிளப்புறாங்க: டில்லிக்கு போட்டியாக மதுரையில் காற்று மாசு: ரோடுகளில் எழுகின்ற புழுதிதான் காரணமாம்
துாள் கிளப்புறாங்க: டில்லிக்கு போட்டியாக மதுரையில் காற்று மாசு: ரோடுகளில் எழுகின்ற புழுதிதான் காரணமாம்
துாள் கிளப்புறாங்க: டில்லிக்கு போட்டியாக மதுரையில் காற்று மாசு: ரோடுகளில் எழுகின்ற புழுதிதான் காரணமாம்
UPDATED : டிச 19, 2024 02:34 PM
ADDED : டிச 19, 2024 05:15 AM

மதுரை: காற்று மாசு என்றலே டில்லியை உதாரணம் காட்டும் சூழலில் மதுரையில் தரமற்ற ரோடுகளில் இருந்து கிளம்பும் மண் துகள், புழுதி வாகன புகையால் காற்று மாசுபாடு மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது.
1994ல் 'ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ்' எனப்படும் காற்றின் மாசு அளவு 50 ஆக இருந்தது. தற்போது மூன்று மடங்காகி 134 ஆக அதிகரித்துள்ளது. 0 - 50 வரை மாசு இருந்தால் வளிமண்டலத்தில் உள்ள காற்று நல்ல நிலையில் உள்ளதாக அர்த்தம். 100 வரை ஓரளவு பரவாயில்லை, 100க்கு மேல் மோசம் என குறியீடு உள்ளது.
இந்தக் குறியீடு மதுரையில் 134 என்று உள்ளது. ஆட்டோமொபைல் (கார்கள்) துறையில் முன்னேறியுள்ள நாம், ரோடு வசதியில் முன்னேறவே இல்லை என்கிறார் மதுரை 'என்விரோ கேர்' நிர்வாக இயக்குநர் ராஜமோகன்.
அவர் கூறியதாவது: இந்தியாவில் ஆஸ்துமா, இளைப்பு நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகளவில் விற்கப்படுகிறது என்றால் காற்று மாசுபாட்டின் அச்சுறுத்தலை அறிந்து கொள்ள முடியும். மதுரையிலும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், அதை சுவாசிப்போருக்கு மூச்சுத் திணறலும் அதிகரித்து வருகிறது.
ரோடு மோசமாக இருப்பதால் எளிதில் பள்ளங்கள் ஏற்படுகிறது. மழை பெய்யும் போது அதில் தண்ணீர் தேங்கும், வெயில் அடிக்கும் போது பள்ளத்தில் சேறு படிந்து காய்ந்து துாசியாக பறக்கிறது. துாசி, புழுதியை மரங்களின் இலைகள் உள்வாங்கும் போது மனிதர்களுக்கு பாதிப்பு குறைந்து விடும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக துாசியை உள்வாங்க போதுமான மரங்கள் ரோட்டோரங்களில் இல்லாததால் சைக்கிள், டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கடை வைத்திருப்போர் மாசடைந்த காற்றை நேரடியாக சுவாசிக்கின்றனர். ஆஸ்துமா, இளைப்பு நோய்க்கு ஆளாவதற்கும் வாய்ப்புள்ளது.
இதற்கான தீர்வு
ரோடு சுத்தமாக இருப்பதே இதற்கு தீர்வு. எளிதில் சேதமடையாத வகையில் தரமான ரோடு அமைக்க வேண்டும், இயந்திரங்கள் மூலம் மண், துகள்களை அடிக்கடி அகற்ற வேண்டும்.
இருபக்க ரோடும் முழுமையாக தார் ரோடாக மாறும் போது துாசியை குறைக்கலாம். ரோட்டோரங்களில் மரங்கள் வளர்ப்பதும் அவசியம். இதை சரிசெய்யாத வரை காற்று மாசுபாட்டுக்கு மதுரையில் தீர்வு கிடைக்காது என்றார்.

