நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : திருவாதவூர் திரவுபதையம்மன் பங்குனி திருவிழா மார்ச் 10 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அர்ஜூனனுக்கும், திரவுபதையம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
இதில் திருவாதவூர், உலகுபிச்சன்பட்டி பகுதிகளில் இருந்து பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. மார்ச் 23ல் அர்ச்சுனன் தவசு, மார்ச் 24 அம்மன் கூந்தல் விரிப்பு, மார்ச் 25ல் கூந்தல் முடிப்பு, மார்ச் 26 பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

