மதுரை: தமிழக அரசு அறிவித்த குறள் வாரம் கொண்டாட்டத்தையொட்டி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குறள் வினாடிவினா, எழுத்துத் தேர்வு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எழுத்துத் தேர்வில் வென்ற 15 ஆசிரியர்கள், 15 அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பதக்கம் வழங்கினார்.
பொதுமக்களுக்கான குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டிகள் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக முதல் ஐந்து பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக அடுத்த ஐவருக்கு தலா ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக அடுத்த ஐவருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
வரும் ஜன. 23 ல் காலை 10:00 மணிக்கு மதுரை லேடிடோக் கல்லுாரியில் பேராசிரியர் சாலமன்பாப்பையா தலைமையில் திருவள்ளுவர் பெரிதும் வலியுறுத்துவது அன்பே, அறிவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்க உள்ளது.

