ADDED : ஜன 24, 2026 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் திருக்குறள் வளர்ச்சி பட்டறை, கருணை உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மோசஸ் பெஞ்சமின், பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜோயல் ராஜ் வரவேற்றார். குட்லாடம்பட்டி மாணவி அக்சயா, திருவேடகம் பள்ளி மாணவன் தியாகேசன், தாதம்பட்டி பள்ளி மாணவி நிலா முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். பவுண்டேஷன் கவுரவ செயலாளர் விஸ்வநாததாசன், திருநாவுக்கரசு பரிசு வழங்கினர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை காந்திமதி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் நன்றி கூறினார்.

