/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இறைச்சி கழிவுகளால் நாறுது திருமங்கலம்
/
இறைச்சி கழிவுகளால் நாறுது திருமங்கலம்
ADDED : ஆக 24, 2025 04:10 AM
திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு தினசரி 1500 கிலோ, ஞாயிறு மட்டும் 5000 கிலோ வரை இறைச்சி விற்பனையாகும். இறைச்சி கழிவுகள் சாக்கடைகளில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
கோழி இறகுகள் உள்ளிட்ட கழிவுகளை விருதுநகர் ரோடு, கரிசல்பட்டி, உசிலம்பட்டி ரோடு, வடகரை, மறவன்குளம் பகுதி ரோட்டோரம் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்கவும், முறையாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி ஆட்டு வதைக்கூடம் மவுலானா ஆசாத் தெருவில் உள்ளது. பல ஆண்டுகளாக செயல்படாத இக்கூடத்திற்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைக்காரர்கள் ரோட்டில் ஆடு வெட்டி வியாபாரம் செய்கின்றனர். கழிவுகளை சாக்கடையில் போடுவதால் அடைப்பு ஏற்படுவதோடு தொற்றுநோய் அபாயம் ஏற்படுகிறது. கடைக்காரர்களிடம் நகராட்சியைச் சேர்ந்த சிலர் 'வசூலிலும்' ஈடுபடுகின்றனர்.