/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாங்கொட்டை திருவிழா மேலுாரில் திருமறைநாதர்
/
மாங்கொட்டை திருவிழா மேலுாரில் திருமறைநாதர்
ADDED : ஜூன் 05, 2025 01:30 AM

மேலுார்: திருவாதவூரிலிருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர் வேதநாயகி அம்பாளுக்கு வழி நெடுக பக்தர்கள் மண்டகப்படி அமைத்து வரவேற்றனர்.
திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழா மே 30ல் துவங்கியது. மே 31 கொடியேற்றப்பட்டது. 11 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவாதவூரிலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் திருமறைநாதர் மேலுாருக்கு எழுந்தருளினார். மேலுார் நுழைவாயிலில் தாசில்தார் செந்தாமரைக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.
பகல் முழுவதும் மேலுாரில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்த திருமறைநாதர் மீண்டும் திருவாதவூருக்கு புறப்பட்டார். ஜூன் 7ல் திருக்கல்யாணம், ஜூன் 8 தேரோட்டம் நடைபெறும். ஜூன் 9 கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
ஏற்பாடுகளை இணை கமிஷனர் கிருஷ்ணன், பேஷ்கார் ஜெயப்பிரகாஷ் செய்திருந்தனர்.