ADDED : டிச 08, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீபூ கல்சுரல் அகாடமி சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான திருப்பாவை பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டி டிச. 25ல் நடக்கிறது.
எல்.கே.ஜி., முதல் 3ம் வகுப்பு வரை முதல் 5 பாசுரங்கள், 4 முதல் 7ம் வகுப்பு வரை முதல் 10 பாசுரங்கள், 8 முதல் 10ம் வகுப்பு வரை முதல் 15 பாசுரங்கள், 11, 12ம் வகுப்பு, கல்லுாரி மாணவர்கள் முதல் 20 பாசுரங்கள் ஒப்புவிக்க வேண்டும். தனியன்கள், வாழி திருநாமம் சொல்லலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பாக ஒப்புவிப்போருக்கு கேடயம் வழங்கப்படும். காலை 9:00 மணிக்கு போட்டிகள் துவங்கும். மாணவர்கள் நேரடியாகவும், பள்ளி, கல்லுாரி மூலமாகவும் பங்கேற்கலாம். பெயர் முன்பதிவு செய்ய 77080 67393ல் தொடர்பு கொள்ளலாம்.