ADDED : டிச 01, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தெற்காடி வீதி திருப்புகழ் சபையின் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான திருப்புகழ் ஒப்புவித்தல் போட்டி வடக்காடி வீதி மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்தது.
தலைவர் கமலை விஜயராஜன் தலைமை வகித்தார். சபை பொருளாளர் செந்தில் சுப்பிரமணியன் வரவேற்றார்.
6 முதல் 8ம் வகுப்பு, 9 முதல்12ம் வகுப்புஎன இருபிரிவாக நடந்த போட்டிகளில் 80 மாணவர்கள் பங்கேற்றனர்.
கும்பகோணம் தொழிலதிபர் கார்த்திக் ராகவமூர்த்தி ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் பரிசு வழங்கினார்.
பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் 'எடுத்ததும் கொடுத்ததும்' எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். சபை செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.

