ADDED : அக் 28, 2025 12:06 AM

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கட்டக்குளம் நெல் கொள்முதல் மையத்தை ஆய்வு செய்த மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக மண்டல இயக்குநர் ராஜ் கிஷோர் ஷாகியிடம், விவசாயிகள் நெல் கொள்முதல் குறித்து முறையிட்டனர்.
ராஜ் கிஷோர் ஷாகி கூறுகையில், ''விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்பது மாநில அரசு பிரச்னை. சரியான நேரத்தில் மையம் திறப்பதும், மற்ற வசதிகள் செய்ய வேண்டியதும் மாநில அரசு தான். நெல்லின் ஈரப்பதம் 17 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும். அதற்கேற்ப டிரையர் கருவிகள், தேவையான வசதிகளை விவசாயிகளுக்கு மாநில அரசு செய்து தர வேண்டும்.
''நெல்லின் தரத்தை ஆய்வு செய்வது மட்டுமே எங்கள் வேலை. ஆய்வகத்தில் கொண்டு போய் நெல்லை ஆய்வு செய்த பின்பே எதுவும் கூற முடியும். இயற்கை பேரிடரால் ஏற்படும் பிரச்னைகளின் போது தரத்தை சற்றே தளர்த்துவது தான் மத்திய அரசின் வேலை,'' என்றார்.

