/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று இப்படிதான்!: மதுரை மாநகராட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள்: பதவிகளை பறிகொடுத்த தி.மு.க., மண்டல தலைவர்கள் வருவதும் 'டவுட்'

ADDED : ஆக 29, 2025 03:54 AM

இதே சர்ச்சையில் சிக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதால் பதவியை ராஜினாமா செய்த ஆளுங்கட்சி மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் வருகையும் கேள்விக்குறியாகி உள்ளது.
அத்துடன் முக்கிய தீர்மானங்களும் இக்கூட்டத்தில் இடம் பெறாததால் ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்பதில் ஆர்வம் காட்டாததால் இன்றைய கூட்டம் பிசுபிசுக்க வாய்ப்புள்ளது.
மாநகராட்சியில் நடந்த ரூ.பல சொத்துவரி முறைகேடு தொடர்பாக அதிகாரிகள், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் உட்பட தி.மு.க.,வினர் கைது, அதிகாரிகள் சஸ்பெண்ட், நீதிமன்றத்தில் அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு, சொத்துவரி நிர்ணயங்களை மறுஆய்வு செய்ய நீதிமன்றம் வழிகாட்டுதலில் நியமிக்கப்பட்ட குழுக்கள், மாநகராட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அ.தி.மு.க., என அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மாநில அளவில் அரசியல் ரீதியான அதிர்வுகளை மதுரை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.
சொத்துவரி முறைகேடு புகார் அளவிலேயே மண்டலத் தலைவர்களை பதவி விலக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் மேயரின் கணவர் கைது செய்யப்பட்ட பின்னரும் மேயர் பதவியில் இந்திராணி நீடிக்கிறார்.
ஒரே குற்றச்சாட்டில் முதல்வர் இவ்வாறு பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கலாமா என மதுரை தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் கடும் அதிருப்தி நிலவுகிறது.
தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: இன்றைய கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்க போவதில்லை. அதிருப்தி காரணமாக பதவியிழந்த தி.மு.க., மண்டல, நிலைக் குழு தலைவர்கள் வருகை கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு கூட்டத்திற்கு முதல் நாள் என்ன பேச வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
ஆனால் நேற்று இரவு வரை மாவட்ட செயலாளர்களோ, அமைச்சர்களோ எவ்வித ஆலோசனைகளும் எங்களுக்கு வழங்கவில்லை. கவுன்சில் கூட்டத்திற்கு போக வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் என்ன தகவல் வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.