/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.1.50 கோடி மோசடி செய்த மூவர் கைது
/
ரூ.1.50 கோடி மோசடி செய்த மூவர் கைது
ADDED : அக் 13, 2024 07:51 AM

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் வேலை தேடிக்கொண்டிருந்தார். அவரை தொடர்பு கொண்ட சிலர், 'பார்ட் டைம்' வேலை இருப்பதாகவும், பல லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பிய இளைஞரிடம் பரிவர்த்தனை கட்டணம் என, ஒரு கோடியே 32 லட்சத்து 6 ஆயிரத்து 883 ரூபாய் வரை பெற்று மோசடி செய்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, புதுச்சேரி வடிவேலு, 44, ஜெய்ராம், 38, விழுப்புரம் ராமலிங்கம், 48, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் ராமலிங்கம் வங்கி கணக்கை ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தியது தெரிந்தது. பல மாநில இளைஞர்களிடம் இக்கும்பல் 1.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது.