/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரிடியம் விற்றால் ரூ.1000 கோடி லாபம் கிடைக்கும் எனக்கூறி ஐ.டி., ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி *'பவர்புல்' மத்திய அமைச்சரின் பெயரை கூறி நம்ப வைத்த மூவர் மதுரையில் கைது
/
இரிடியம் விற்றால் ரூ.1000 கோடி லாபம் கிடைக்கும் எனக்கூறி ஐ.டி., ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி *'பவர்புல்' மத்திய அமைச்சரின் பெயரை கூறி நம்ப வைத்த மூவர் மதுரையில் கைது
இரிடியம் விற்றால் ரூ.1000 கோடி லாபம் கிடைக்கும் எனக்கூறி ஐ.டி., ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி *'பவர்புல்' மத்திய அமைச்சரின் பெயரை கூறி நம்ப வைத்த மூவர் மதுரையில் கைது
இரிடியம் விற்றால் ரூ.1000 கோடி லாபம் கிடைக்கும் எனக்கூறி ஐ.டி., ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி *'பவர்புல்' மத்திய அமைச்சரின் பெயரை கூறி நம்ப வைத்த மூவர் மதுரையில் கைது
ADDED : செப் 25, 2025 03:16 AM

மதுரை : மதுரையில் ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள இரிடியத்தை விற்றால் ரூ.1000 கோடி வரை லாபம் கிடைக்கும் எனக்கூறி ஐ.டி., ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஐ.டி., ஊழியர் ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர். இவருக்கு கோவை கோவில்பாளையம் ஆனந்த் என்பவர், சுனில் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் காலில் அறிமுகமாகி இரிடியம் தொடர்பான வீடியோவை அனுப்பினார். அந்த இரிடியம் 3.75 கிலோ எடை கொண்டது. இதன் உரிமையாளர் கேரளா பாலக்காடு நகலி என்ற ஊரில் உள்ள சரத்குமார். இரிடியத்தை விற்றால் ரூ.1000 கோடி கிடைக்கும். பார்ட்டனராக சேர்ந்தால் வருவாய் கிடைக்கும் என்றார். இதை நம்பிய ஐ.டி., ஊழியரிடம், போனில் சரத்குமாரிடம் பேசவைத்தார்.
அமைச்சரின் மகன் பின்னர் மூவரும் மதுரை வந்து தனியார் ஓட்டலில் சந்தித்தனர். உண்மையான இரிடியம்தானா என்பதை உறுதிசெய்ய அவர்கள் தெரிவித்த கொல்கட்டா கிறிஸ்டியன் டேவியஸ் ஆன்டிக் நிறுவன ஊழியர்கள் வருண்கிருஷ்ணா, ஜோசப், ஜோ, சாபு ஆகியோரிடம் ஐ.டி., ஊழியர் விசாரித்தபோது பரிசோதனை செய்ய ரூ.8.50 லட்சமாகும் என்றுக்கூறி பணம் பெற்றனர்.
கோவையில் வருண்கிருஷ்ணா ரசாயன முறையில் பரிசோதிப்பது போல் நடித்து 'இது ரூ.5 லட்சம் கோடி முதல் ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ளது' என நம்ப வைத்தார். இதிலிருந்து உலோகத்தை பிரித்தெடுக்க ரூ.1.82 கோடி செலவாகும்.
அதில் ஐ.டி., ஊழியர் பங்காக ரூ.55 லட்சத்தை மதுரையில் பெற்றுக்கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு ஐ.டி., ஊழியரை தொடர்பு கொண்ட சுனில், இரிடியத்தை சரத்குமார் தனது நண்பருடன் கடத்திச் சென்றுவிட்டார். அந்த நண்பர் 'பவர்புல்' மத்திய அமைச்சர் ஒருவரின் மகன். தன்னையும் 'பார்ட்டனராக' சேர்த்துக்கொள்வதோடு ரூ.3 கோடி தரவேண்டும். அப்போதுதான் இரிடியத்தை திருப்பித்தருவேன் என அமைச்சரின் மகன் நிபந்தனை விதித்ததாக தெரிவித்தார்.
மதுரையில் தந்த ரூ.1.20 கோடி தயங்கிய ஐ.டி., ஊழியரிடம் 'சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி மனைவி கலெக்டராக உள்ளார். அவர் அமைச்சருக்கு உறவினர். அவர் மூலம் பேசினால் ரூ.3 கோடியை குறைத்து பேசலாம்' எனக்கூறி 'பேச்சுவார்த்தை' நாடகம் நடத்தி ரூ.1.50 கோடி தருவது என முடிவானது. இதில் முதல் தவணையாக ரூ.1.20 கோடியை மதுரை தனியார் ஓட்டலில் வைத்து ஐ.டி., ஊழியர் தந்தார். இதைதொடர்ந்து இரிடியத்தை அமைச்சரின் மகனிடம் இருந்து பெற்றுக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருப்பதாக கூறினர்.
மறுநாள் ஐ.டி., ஊழியரை தொடர்பு கொண்ட சரத்குமார் 'பெங்களூரு டி.ஆர்.டி.ஓ., சான்று வாங்க வேண்டும், இரிடியம் வெப்பத்தன்மை உடையதால் அதை குளிர்ச்சியாக வைக்க 'கூலிங் கிட்' வாங்க வேண்டும். அதற்கு ரூ.6.50 கோடி செலவாகும்' என்றார்.
இப்படி பல தவணைகளாக மொத்தம் ரூ.1.88 கோடி ஐ.டி., ஊழியரிடம் பெற்ற நிலையில் இரிடியம் உலோகம் வெடித்துவிட்டதாக அவரிடம் கூறினர்.
அப்போதுதான் அனைவரும் கூட்டுச்சதி செய்து தன்னை ஏமாற்றியதை ஐ.டி., ஊழியர் உணர்ந்தார். இதுதொடர்பாக மதுரை கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். சரத்குமார் உட்பட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார் 51, சுனில் 35, வருண்குமாரை 40, கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.