ADDED : ஜூலை 03, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்தூர் கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மன்றங்களின் துவக்க விழா, புதிய மாணவர்களை வரவேற்கும் விழா, நேர்மையாளர் கடையின் 21ம் ஆண்டு துவக்க விழா தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் தலைமையில் நடந்தது.
பொருளாளர் செல்வமணி, உதவித்தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக செக்கானுாரணி கேரன் பள்ளி முதல்வர் பிரபாகரன் பங்கேற்று கல்வியின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நேர்மையாளர் கடையின் ஆண்டு அறிக்கையை பொறுப்பு ஆசிரியை பாத்திமா வாசித்தார். மாணவி பூஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வம், சுஜேந்திரன், மகாலட்சுமி, தீபா, சகாயராஜ், லுார்துமேரி, அற்புதம் ஆகியோர் செய்திருந்தனர்.