/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து மூன்று பேர் பலி
/
வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து மூன்று பேர் பலி
ADDED : மே 21, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி:வளையங்குளத்தில், வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், பேரன், பாட்டி உட்பட மூவர் இறந்தனர்.
மதுரை மாவட்டம், வளையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாபிள்ளை, 65.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டு வாசலில் பேரன் வீரமணி, 10, பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கட்டி, 55, ஆகியோருடன் அம்மாபிள்ளை பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் மூவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெங்கட்டி இறந்தார்.
சிகிச்சையில் இருந்த அம்மாபிள்ளை, வீரமணி நேற்று இறந்தனர். பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.