ADDED : டிச 11, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வெளிச்சநத்தம் கிராமத்திற்கு வி.சி.கட்சியின் தலைவர் திருமாவளவன் சில நாட்களுக்கு முன் வந்த போது கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அனுமதியின்றி கொடிக்கம்பம் நடுவதாகக் கூறி போலீசார், வருவாய்த்துறையினர் தடுத்ததால் பிரச்னை உருவானது.
கட்சிகளின் கொடிக்கம்ப பிரச்னையில் போலீசார் அனுமதி வழங்குவர் என்றாலும், வருவாய் அலுவலர்கள் மீதே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே பணிபாதுகாப்பு வேண்டும் என அவர்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையில் கிராம உதவியாளர் பழனியாண்டி, வி.ஏ.ஓ., பரமசிவம், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.