நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மதுரை மை பாரத் மற்றும் அன்னை செவிலியர் பயிற்சி பள்ளியுடன் இணைந்து உழவாரப் பணி செய்தனர்.
பயிற்சி பள்ளி முதல்வர் சிலம்புச் செல்வி துவக்கி வைத்தார். மை பாரத் ஒருங்கிணைப்பாளர் ஜனகைமாரி முன்னிலை வகித்தார். அன்னை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், முள்ளிப்பள்ளம் ஜே.பி., மகளிர் மன்றம், தாதம்பட்டி சாம் மகளிர் மன்றத்தினர் கோயில் வளாகத்தில் துாய்மை பணி செய்து, மரக்கன்றுகள் நடவு செய்தனர்.