ADDED : பிப் 16, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஆனையூர் உழவர் சந்தையில் 16வது ஆண்டு விழா நடந்தது. மதுரை விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி முன்னிலை வகித்தார்.
வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி பேசியதாவது: அண்ணாநகர், சொக்கிகுளம் உழவர் சந்தைகளில் மின்னணு வர்த்தக தளத்தின் மூலம் விளைபொருட்களை நுகர்வோர் பெற ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் ஆனையூர் உழவர் சந்தைக்கும் இப்பயன்பாடு கொண்டு வரப்படும். இதன் மூலம் நுகர்வோர்கள் வீட்டில் இருந்தபடியே காய்கறி, பழங்களை பெறலாம் என்றார். மூத்த விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். பொறியியல் மேற்பார்வையாளர் அனிதா கலந்து கொண்டனர். உதவி வேளாண் அலுவலர் ராஜூ ஏற்பாடுகளை செய்திருந்தார்.

