ADDED : அக் 03, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம், பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. மலைக்கு பின்புறம் பால்சுனைகண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து தங்க நாகாபரண அலங்காரமானது.

