ADDED : ஜன 28, 2024 04:21 AM
மதுரை மதுரை அரண்மனையில் மன்னர் திருமலை நாயக்கர் 441வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அமைச்சர் மூர்த்தி திருமலைநாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், டி.ஆர்.ஓ., சக்திவேல், துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ்சர்மா, தாசில்தார் முத்துப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
* மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்தனர். சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், இளங்கோ, சுந்தரராஜன், சேது, தர்மராஜ், ரவி, சம்பத், சுப்பராஜ், மணவாளன், ரவீந்திரன், நவநீதகுமார், ரமேஷ் பங்கேற்றனர்.
வாடிப்பட்டி: ஒன்றிய நாயுடு மகாஜன சங்கம் சார்பில் திருமலை நாயக்கர் உருவப்படத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் பொன் கமலக்கண்ணன் மாலை அணிவித்தார். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தி.மு.க., அவைத் தலைவர் திரவியம், சங்க ஒன்றிய நிர்வாகி புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். நிர்வாகி குப்புசாமி வரவேற்றார். நிர்வாகிகள் பாண்டி, சுதாகர், பாபு, துரைராஜ், இளங்கோ, பாஸ்கரன் பங்கேற்றனர்.