நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான், : சோழவந்தான் ரயில்வே பாலம் பகுதியில் எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்கு, பான்மசாலா பாக்கெட்டுகளுடன் ரயிலில் வந்து இறங்கிய மதுரையை சேர்ந்த அசோக் குமாரை 54, கைது செய்தனர். சோழவந்தான் பகுதி கடைகளுக்கு விற்க கொண்டு வந்த 26 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.