/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று இனிதாக ... (26.11.2025) மதுரை
/
இன்று இனிதாக ... (26.11.2025) மதுரை
ADDED : நவ 26, 2025 05:04 AM
கோயில்
கார்த்திகை தீபத் திருவிழா - 2ம் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கச்சப்பரத்தில் சுவாமி புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் தங்குதல், காலை 8:00 மணி, வெள்ளிபூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
மக்களுக்கு செய்முறை விளக்கங்களுடன் கூடிய 'மைம்' நடிப்புக்காட்சியின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு: பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை: போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, ஏற்பாடு: போக்குவரத்து போலீசார், டிராபிக் வார்டன், காலை 10:00 மணி.
78வது ஆண்டு கீதா யாகம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, கீதா பாராயணம், யாகம், தலைமை: சுப்பிரமணியன், காலை 7:30 முதல் 10:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி
தேசிய மாணவர் படைக்கான வேலைவாய்ப்பு திறன், மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம்: யாதவா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: அமெரிக்கன் கல்லுாரி ஓய்வு பெற்ற பொருளாதார துறைத் தலைவர் பேராசிரியர் முத்துராஜா, காலை 10:30 மணி.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளுதல் - மீள் உலகிற்கான, உணவு, விவசாய ஒருங்கிணைப்பு பற்றிய சர்வதேச மாநாடு: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: விஞ்ஞானி சிரிமாவு நாயர், கல்லுாரி செயலாளர் இக்னேசியஸ் மேரி, காலை 11:00 மணி முதல்.
மருத்துவம்
மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி தொடக்க பள்ளி, பெத்தானியாபுரம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி சந்தைப்படுத்தும் சரஸ் மேளா உணவுத் திருவிழா: தமுக்கம், மதுரை, ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

