ADDED : ஜூலை 31, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் காரீப் பருவ குறுவை நெல் சாகுபடிக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர இன்று (ஜூலை 31) கடைசி நாள் என வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.720ஐ தேசிய வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்களில் செலுத்தலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பீட்டில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாக்கலாம்.
தேசிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள், வேளாண் நகைக்கடன் பெறும், பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் சேரலாம் என்றார்.