UPDATED : ஆக 17, 2026 10:42 PM
ADDED : ஆக 17, 2026 06:44 PM
ஆக. 18
கோயில் * ஆவணி மூல உற்ஸவம்: மாணிக்கம் விற்ற லீலை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 9:00 மணி.
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* வளர்பிறை சஷ்டி விழா: தங்கமய முருகன் கோயில், சிவகங்கை ரோடு, விளத்துார், சுவாமிக்கு சிறப்பு பூஜை, பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மாலை 5:00 மணி, அன்னதானம் மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு * திரிவேணி விழா -- சிவானந்த ஜெயந்தி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு குறள் ஒப்புவித்தல் போட்டி, மாலை 5:00 மணி.
* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* ஸ்ரீமத் பகவத்கீதை சம்பூர்ண பாராயணம்: சிரவணானந்த ஆசிரமம், 4கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
* அகண்ட மஹாமந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை.
* ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
பொது * இலக்கிய இன்பம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தமிழால் இணைவோம் அமைப்பின் ஆளுநர் சரஸ்வதி, திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:30 மணி முதல்.
* ஹிந்தி மொழி சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, பயிற்றுநர் - காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
* திருமங்கலம் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பொது
=====
* பல்மருத்துவ முகாம்: மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, பங்கேற்பு: டாக்டர் அருண்குமார், ஏற்பாடு: குறிஞ்சி மலர் லயன்ஸ் சங்கம், கருடா பல்மருத்துவமனை, காலை 10:00 மணி.
* கோரிக்கை மனுஅனுப்பும் இயக்கம்: கோட்டப் பொறியாளர் அலுவலகம், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம், அழகர்கோயில் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, ஏற்பாடு: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கம், காலை 11:00 மணி.
