தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


UPDATED : செப் 14, 2026 10:09 PM

ADDED : செப் 14, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 10:09 PM ADDED : செப் 14, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, எட்டாம் கால யாக வேள்வி, காலை 8:30 முதல் 11:30 மணி வரை, ஒன்பதாம் கால யாக வேள்வி, மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

* ஜெயந்தி உற்ஸவம்: நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, கந்தகப்படி சேர்த்தி, இரவு 7:00 மணி.

* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ரத ஊர்வலம்: கிருஷ்ணாபுரம் காலனியில் இருந்து மொட்டைப் பிள்ளையார் கோயில் வரை, துவக்கி வைப்பவர்: நெசவாளர் மாநில பிரிவு செயலாளர் ஜனார்த்தனன், ஏற்பாடு: குருஜி சேவா சங்கம், மாவட்ட ஹிந்து முன்னணி, மதியம் 2:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

* சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* முதலாமாண்டு மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் டயானா தெரேஸ், ஆல்வின் சந்தோஷ், ஜெயந்த் முரளி, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை

* உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர்கள் சங்க மாதாந்திர கூட்டம்: எம்.எல்.டபிள்யூ.ஏ., மேல்நிலைப்பள்ளி, தலைமை: தலைவர் ராஜேந்திரன், நல்லாசிரியர் விருது வென்றவர்களை கவுரவித்தல், ஒருங்கிணைப்பு: பொருளாளர் ரமேஷ் பாபு, மாலை 5:00 மணி.

* உயிர் தகவலியல் மென்பொருள் கருவிகள் - நடைமுறை பயிற்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: காரியாப்பட்டி சேது தொழில்நுட்பக் கல்லுாரி உதவிப் பேராசிரியர்கள் நாகேஸ்வரி, பிரவீணா, ஏற்பாடு: உயிர்வேதியியல் துறை, காலை 10:00 மணி.

பொது

* எம்.எஸ்.சுப்புலட்சுமி ஜெயந்தி தின இசை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, லாவண்யா வேணுகோபால் இயக்கிய 'காற்றினிலே வரும் கீதம்' வாழ்க்கை வரலாறு நாடகம், பங்கேற்பு: த்ரீ குழுவினர், ஏற்பாடு: ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.

* 108 விநாயகர் சிலை ஊர்வலம்: தேரடி, விளக்குத்துாண், மதுரை, துவக்கி வைப்பவர் தமிழக ஹிந்து மகா சபை நிறுவனத் தலைவர் ராஜா, சிறப்பு விருந்தினர்கள்: சங்கராபுரி ஆதினம், நிலையூர் ஆதினம் சுப்பிரமணி சுவாமிகள், நாகசித்தர் சுவாமிகள், காலை 11:00 மணி.

* ஜான்மோசஸ் 6ம் ஆண்டு, பாக்கியத்தேவர் 4ம் ஆண்டு நினைவேந்தல் புகழஞ்சலி: காமராஜ்பவன், மந்தைத்திடல், அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை: ஜனதாதளம் புறநகர் செயல்தலைவர் ராஜா, மரியாதை செலுத்துபவர்: மாநில பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி, காலை 10:00 மணி.

விளையாட்டு

* முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, கல்லுாரி மாணவர்களுக்கான தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கைப்பந்து, வாலிபால், கேரம், செஸ், மேசைப்பந்து, சிலம்பம், கபடி போட்டிகள், ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.

கண்காட்சி

* ஸ்ரீலெதர்ஸ் வழங்கும் காலணிகள், ஹேண்ட் பேக், பர்ஸ் உள்ளிட்ட லெதர் பொருட்கள் கண்காட்சி விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us