UPDATED : செப் 03, 2026 06:56 PM
ADDED : செப் 03, 2026 06:52 PM
செப். 4கோயில்
* கிருஷ்ண ஜென்மாஷ்டமி மஹோத்ஸவம்: கிருஷ்ண பலராமர் கோயில், திருப்பாலை, நாம சங்கீர்த்தனம், மஹாமந்திர ஜெப யாகம், சிறப்பு அபிஷேகம், ஆரத்தி, ஏற்பாடு: இஸ்கான், காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
* கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் - ராதை விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை: மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
* ஜெயந்தி உற்ஸவம்: நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, கிருஷ்ண ஜனன வைபவத்தை முன்னிட்டு சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
* ஆவணி 3ம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
* சர்ச் பெருவிழா - கொடியேற்றம்: செயின்ட் மேரிஸ் சர்ச், கீழவாசல், மதுரை, தலைமை மற்றும் மறையுரை: மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து, மாலை 6:00 மணி.
* சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, பக்தசபை தினத்தை முன்னிட்டு பாதிரியார் மைக்கேல் யூஜின் வழங்கும் திருப்பலி, காலை 11:30 மணி, வத்தலகுண்டு வட்டார அதிபர் ஜோக்கிம் வழங்கும் திருப்பலி, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை, பஜனை, நாமசங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி: தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - சுவாமி வேதாந்த ஆனந்தா சரஸ்வதி, காலை 6:30 மணி, மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவாமூர்த்திகளின் திருமுறை இசை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, சிறப்புரை: சீனிவாசன், மாலை 6:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* கோகுலாஷ்டமியை முன்னிட்டு அகண்டநாமம், அபிஷேகம், கண்ணனை தொட்டிலில் இடும் வைபவம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* மாமதுரை முத்தமிழ் விழா - தென்மாவட்ட அளவில் அனைத்துக் கல்லுாரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மதுரை இலக்கிய மன்றம், யங் இந்தியன்ஸ் அமைப்பு, காலை 10:00 மணி.
* தரமான ஆராய்ச்சி, ஆராய்ச்சி நிதியுதவி முன்மொழிவு தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் - தேசிய அளவிலான இணையவழி ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விஞ்ஞானி சஞ்சீவ் குமார் வர்ஷ்னி, மாலை 6:30 மணி.
மருத்துவம்
* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
