தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆபத்து நிழற்குடை அகற்றப்படுமா

ஆபத்து நிழற்குடை அகற்றப்படுமா

ஆபத்து நிழற்குடை அகற்றப்படுமா


ADDED : செப் 03, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: இரும்பாடியில் ஆபத்தான நிழற்குடையை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

இங்கு பஸ்ஸ்டாப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. வலிமையிழந்து காலாவதியாகி விட்டதால் கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் விழுந்தும், காரைகள் பெயர்ந்தும் கம்பிகள் வெளியில் தெரிகின்றன.

இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. தற்போது போஸ்டர் ஒட்டவும், வாகனங்கள் நிறுத்தவும் மட்டுமே பயன்படுகிறது. இதனால் பயணிகள் மழை, வெயிலுக்கு வெளியே நின்று அவதியுறுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us