UPDATED : ஆக 19, 2026 11:27 PM
ADDED : ஆக 19, 2026 06:52 PM
ஆக. 20
கோயில் * ஆவணி மூல உற்ஸவம்: உலவாக்கோட்டை அருளியது லீலை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:00 மணி, சுவாமி நந்திகேஸ்வரர் வாகனம், அம்மன் யாழி வாகனத்தில் பவனி, இரவு 7:00 மணி.
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* அனுஷம் நட்சத்திரம் உற்ஸவம் முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 246, வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல் நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு * திரிவேணி விழா -- சிவானந்த ஜெயந்தி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மதுரை மாநகராட்சி அனைத்து பள்ளி மாணவர்களுக்கான பகவத்கீதை ஒப்புவித்தல் போட்டி, மாலை 5:00 மணி.
* திருவாசகம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
* அஷ்டாவக்கிரகீதை: நிகழ்த்துபவர் - - ஜனார்த்தனன், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி, ஆன்மிக சொற்பொழிவு, மதியம் 1:00 மணி.
* அன்னை சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
பொது * மதுரை தெற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், சுப்பிரமணியபுரம், மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி * பு.ரா.புருஷோத்தம நாயுடுவின் தமிழியல் பங்களிப்புகள், 125ம் பிறந்த ஆண்டு கருத்தரங்கம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராம சுப்பையா, சிறப்புரை: சீனிவாசன், முன்னிலை: புதுடில்லி சாகித்ய அகாடமி செயலர் வருண்குலாட்டி, ஏற்பாடு: சாகித்ய அகாடமி, கல்லுாரி தமிழ் உயராய்வு மையம், காலை 9:30 மணி முதல்.
* வணிக துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: கோவை ஐ.ஐ.சி., லட்சயா குழுத்தலைவர் அருண்பாண்டியன், முன்னிலை: தாளாளர் குமரேஷ், மதியம் 12:45 மணி.
