தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 12, 2026 10:35 PM

ADDED : ஆக 12, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 10:35 PM ADDED : ஆக 12, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக. 13

கோயில்

* ஆவணி மூல உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சந்திரசேகரர் புறப்பாடு, காலை 8:00 மணி, இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, கூடல்நகர், மதுரை, நிகழ்த்துவோர் - சந்தோஷ் சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

* ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு: நாகம்மாள் கோயில், மேலுார், காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, காலை 7:15 மணி, வாசிநாதம் அடியாரின் சத்சங்கம், ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி.

* திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சாதன சதுஷ்டயம் - சமாதி ஷட்க ஸம்பத்தி: நிகழ்த்துபவர் - மேனகா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா பாகவதர், மதன கோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* விளையாட்டு விழா: செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: பள்ளி அதிபர் ஹென்றி ஜெரோம், சிறப்பு விருந்தினர்: முன்னாள் மாணவர் பிரபு, பங்கேற்பு: போலீஸ் உதவி கமிஷனர் சந்திரலேகா, எம்.எல்.ஏ., கோபிசன், முன்னாள் எம்.எல்.ஏ., பூமிநாதன், கவுன்சிலர் விஜயலட்சுமி, காலை 8:30 மணி.

* திறன் மேம்பாட்டு பயிற்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், தாளாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: யுனிக் சொல்யூஷன்ஸ் நிறுவனர் கபிலன், ஏற்பாடு: எம்.சி.ஏ., துறை, காலை 10:00 மணி.

* காலநிலை மாற்றத் தழுவலுக்கான புவிசார் ஆதரவு - தேசிய மாநாடு: மதுரை காமராஜ் பல்கலை, தலைமை: பதிவாளர் முத்தையா, பங்கேற்பு: பல்வேறு பல்கலை பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தேசிய தொலை உணர்வு மையம், தேசிய புவி அறிவியல் ஆய்வு மையம் விஞ்ஞானிகள், காலை 10:00 மணி.

* தாகூரின் 'சண்டாலிகா' நாடகத் தழுவல் - மாணவிகளின் அரங்கேற்றம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஆங்கில முதுகலைத் துறை மாற்றும் ஆராய்ச்சி மையம், காலை 9:30 மணி, மதியம் 12:00 மணி, மதியம் 2:00 மணி.

பொது

* நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் கோட்டப் பேரவை கூட்டம்: சங்கக் கட்டடம், ரேஸ்கோர்ஸ் அருகே, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மணிமாறன், சிறப்பு விருந்தினர்: மாநில பொருளாளர் தமிழ், செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, காலை 11:00 மணி.

* இசை கச்சேரி: ஓட்டல் தமிழ்நாடு (பார்ச்சூன் பாண்டியன்), மதுரை, பாட்டு: விக்னேஷ் ஈஸ்வர், வயலின்: பாஸ்கர், மிருதங்கம்: பிரவீன் ஸ்பார்ஷ், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.

* பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சங்கத் தமிழ்மாலை திருப்பாவை ஒப்புவித்தல் நிகழ்ச்சி: எஸ்.பி.வி.எம்., பள்ளி, முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீபூ கலாசார மையம் - மொழித்திறன் வளர் களம், காலை 9:30 மணி.

விளையாட்டு

* வருவாய் மாவட்ட அளவிலான மகளிர் ஒற்றையர் பிரிவு டெனிகாய்ட், மகளிருக்கான டேக்வாண்டோ போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 8:00 மணி.

* மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான ஆடவர், மகளிர் பிரிவு நீச்சல் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை, காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us