தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வடக்கு தாலுகாவில் விவசாயிகளுக்கு தீர்வு

வடக்கு தாலுகாவில் விவசாயிகளுக்கு தீர்வு

வடக்கு தாலுகாவில் விவசாயிகளுக்கு தீர்வு


ADDED : ஆக 12, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வடக்கு தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கமலேஷ் தலைமையில் நடந்தது. துணைத் தாசில்தார் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் ஜெயகணேஷ், வி.ஏ.ஓ.,க்கள் உட்பட வருவாய் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: குலமங்கலம் கிராம கால்வாய்களில் ஆக்கிரமிப்பை அளவிட்டு, அகற்றினால்தான் மழைக் காலத்தில் தண்ணீர் வரும். நெல் கொள்முதல் மையங்களில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். ரோட்டின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும். தபால் தந்தி நகரில் ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மஞ்சம்பட்டியில் மடையன் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்த தாசில்தார், ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற சனிக்கிழமை தோறும் வருவாய், சர்வேயர்களைக் கொண்ட குழுஅமைத்து நீதிமன்ற உத்தரவு, பொதுமக்களின் மனுக்கள், வேறு துறைகளின் கோரிக்கைகள் அடிப்படையில் அளவீடு செய்யப்படும். பொதுமக்களைக் கொண்ட வாட்ஸ் ஆப் குழு அமைத்து அலுவலர்கள், விவசாயிகளுக்கு தொடர்பு ஏற்படுத்தி குறைகளை களைவதுடன், நலத்திட்டங்களை பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us