ADDED : ஆக 22, 2024 02:51 AM
கோயில்
பாலாலயத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 9:00 முதல் மாலை 4:30 மணி வரை.
கும்பாபிஷேகம் - யாகசாலை: தண்டாயுதபாணி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, விக்னேஸ்வர பூஜை, 1ம் கால ஹோமம், வேத பாராயணம், காலை 7:45 மணி, 1ம் கால பூர்ணாஹூதி ஹோமம், மதியம் 12:00 மணி, 2ம் கால ஹோமம் மாலை 5:00 மணி, 2ம் கால பூர்ணாஹூதி ஹோமம், இரவு 8:00 மணி.
கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம்: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, பரிவார திருமஞ்சனம், காலை 9:00 மணி, தேவதரி அர்ச்சனை, மாலை 7:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, யமுனா ரோடு, எல்லீஸ் நகர், மதுரை, மாலை 5:30 மணி.
மகா சங்கட ஹர சதுர்த்தி பூஜை, லட்சுமி விநாயகருக்கு அபிேஷகம், அலங்காரம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:30 மணி.
குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நாராயணீயம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
வங்கித் தேர்வை எதிர்கொள்வது எப்படி - வழிகாட்டி நிகழ்ச்சி: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, தலைமை: முதல்வர் விசுமதி, சிறப்பு விருந்தினர்: நேஷனல் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம், காலை 10:30 மணி.
பொது
மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம்: முனிச்சாலை சந்திப்பு, மதுரை, பங்கேற்பு: மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏற்பாடு: மதுரை நகர் பா.ஜ., மாலை 4:00 மணி.
தமிழில் அறிவியல் - தமிழ்க்கூடல் நிகழ்ச்சி: உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: இயக்குனர் அவ்வை அருள், சிறப்புரை: முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி முத்து, காலை 10:30 மணி.
கைப்பேசி போதையை முறியடிப்போம் - அலைபேசி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, அச்சம்பட்டி, தலைமை: தலைவர் ஜெயராஜசேகர், ஏற்பாடு: ஏ.என்.டி., கல்வி, மருத்துவ, சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி, 'நல்லோர் சிந்தனை நாடுக' தலைப்பில் நகர் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி: தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 5:00 மணி.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: மேலமடை, எழில்நகர் சந்திப்பு, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.
முத்தமிழ் முற்றம் பயண இலக்கியம் - அனுபவ பகிர்வு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், புதுநத்தம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஏ.கே.ஆர். சவுராஷ்டிரா கல்வியியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் ரேணுகா தேவி, மாலை 5:00 மணி.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
விளையாட்டு
மேலுார் குறுவட்ட விளையாட்டு விழா: அரசுக் கலைக் கல்லுாரி மைதானம், மேலுார், தலைமை: முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், காலை 8:00 மணி.
கண்காட்சி
லட்சுமி கலெக் ஷன் - வெள்ளி நகைகள் கண்காட்சி: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: ஆர்ட் காரட் ஜூவல்லரி, காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.