ADDED : செப் 21, 2024 05:54 AM
கோயில்
மதுரை ஆவணி மூல திருவிழாவில்கலந்து கொண்ட மாணிக்கவாசகர் கோயிலை வந்தடைதல்,திருமறைநாதர் கோயில், திருவாதவூர், காலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ணமடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் - ஜெனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சத்சங்கம், கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:00 மணி.
நீ பிறந்த திருவோணம்: மதன கோபால சுவாமி கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
31வது ஆண்டு தமிழக வரலாற்று அமர்வு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: மெட்ராஸ் பல்கலை முன்னாள் பேராசிரியர் சண்முகம், சிறப்புரை: தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: வரலாற்றுத் துறை, காலை 9:30 மணி.
அரசின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்புரை: திண்டுக்கல் மாவட்ட தொழிற்சாலைகள் மைய உதவி இயக்குனர் நாகராஜன், காலை 9:45 மணி.
மாணவர்கள் சந்திப்பு கூட்டம்:வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: பொறுப்பு முதல்வர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.
புளூமிங் பட்ஸ் - பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள்: என்.எம்.எஸ். விஜயலட்சுமி சஞ்சீவிமலையான் கல்வியகம், மதுரை, தலைமை: முதல்வர் செல்ராஜ்குமார், சிறப்பு விருந்தினர்: துணை மேயர் நாகராஜன், மதியம் 12:00 மணி.
பொது
உலக இந்து கல்வியாளர்கள் சங்க முதல் மாநில மாநாடு: ஆகாஷ் கிளப், பரவை, மதுரை, பங்கேற்பு: விஷ்வ இந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர் தாணு மாலையான், காந்திகிராம பல்கலை டீன் சேதுராமன், மாநில செயலாளர் லட்சுமண நாராயண ராமசாமி, ஏற்பாடு: விஷ்வ இந்து பரிஷத், காலை 9:30 மணி.
சமூகநீதி ஆய்வரங்கம்: ஓட்டல்மெஜஸ்டிக், கே.கே.நகர், மதுரை, தலைமை: பி.ஆர்.பி.சி., தலைவர் சீனிவாசன், சிறப்புரை வழங்குவோர்: முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், ஏற்பாடு: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மாலை 5:30 மணி.
ஐந்தாவது பட்டய நாள் கொண்டாட்டம்: ராம் ரத்னா ரெசிடென்ஸி, மாட்டுத்தாவணி, மதுரை, பங்கேற்பு: முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுனர்புருஷோத்தமன், பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் மூரா, ஏற்பாடு: ரோட்டரி சங்கம் மதுரை பிரசிடென்ஸி, மாலை 6:30 மணி.
அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: எல்லீஸ் நகர், மதுரை, தலைமை: மேற்கு 5ம் பகுதி செயலாளர் சோலை ராஜா, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: மாநகர் மாவட்ட மத்திய தொகுதி அ.தி.மு.க., மாலை 6:00 மணி.
திருக்குறள் அமுதம்: மணி மொழியனார் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தலைவர் கருப்பையா, திருக்குறள் விளக்கவுரை வழங்குவோர்: ஓய்வு ஆசிரியர் திருமாவளவன், ஆசிரியர் சிவசத்தியா, ஏற்பாடு: உலகத்திருக்குறள் பேரவை, மாலை 5:00 மணி.
தென் மண்டல வளர்ச்சி வாரிய அலுவலகம் மதுரையில் அமைத்திட தமிழக அரசை வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் அய்யல்ராஜ், துவக்கி வைப்பவர்: மாநில பொதுச் செயலாளர் குமரய்யா, காலை 10:30 மணி.
இசைக் கச்சேரி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, குரலிசை: ஸ்வேதா பாலசுப்பிரமணியன், வயலின்: விஜய்கணேஷ், மிருதங்கம்: சுதர்சன் ஸ்ரீனிவாஸ், மாலை 5:30 மணி.
பல்வேறு மருத்துவர்கள் பங்கேற்கும் மருத்துவ புதுப்பிப்பு மாநாடு: ஓட்டல் மேரியாட் கோர்ட்யார்ட், மதுரை, தலைமை: டாக்டர் பழனியப்பன், ஏற்பாடு: அப்போலோ மருத்துவமனை, மதியம் 1:00 மணி.
விளையாட்டு
மண்டல அளவிலான முதல்வர்கோப்பை விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, கல்லுாரி மாணவ மாணவிகளுக்கான ஜூடோ போட்டி, காலை 8:00 மணி.
கண்காட்சி
தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ 2024: ஐடா ஸ்கட்டர், மதுரை, மாலை 6:00 மணி.
தீபாவளியை முன்னிட்டு சேலைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சாரீஸ், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.