ADDED : அக் 29, 2024 05:29 AM
கோயில்
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
பிரதோஷ விழா, சந்த்ர மவுலீஸ்வரக்கு சிறப்பு அபிேஷகம், ருத்ரம்,சமகம், மகன்யாசம் ஜெபம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.
புரட்டாசி மாத திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, பொங்கல், அக்னிச்சட்டி புறப்பாடு,மாலை 6:00 மணி, சீர்பாதம் தாங்கி வகையறா மண்டகப்படியினர்அம்மனை கிராம சாவடிக்கு சப்பரத்தில் அழைத்து வருதல், அம்மன் ஆற்று கரகம், இரவு 8:00 மணி, இன்னிசை கச்சேரி, இரவு 10:00 மணி.
பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாத சுவாமி, நந்திகேஸ்வரர் சிறப்பு அபிஷேகம், பூஜை: சங்க விநாயகர் கோயில், அனுப்பானடி, மதுரை, ஏற்பாடு: ஆன்மிக சேவா சங்கம், மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
தீபாவளி கொண்டாட்டம்: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், தலைமை: பள்ளி முதல்வர் ஈஸ்டர் ஜோதி, காலை 9:00 மணி.
தீபாவளி கொண்டாட்டம்: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, தலைமை: தாளாளர் சிவராம், முன்னிலை: முதல்வர் விசுமதி, காலை 10:30 மணி.
பொது
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் அருள் சுந்தரேஷ் குமார், சிறப்பு விருந்தினர்கள்: டாக்டர்கள் மல்லிகா, குமரவேல், சரவணன், முரளிதரன், ஏற்பாடு: நரம்பியல் துறை, காலை 10:00 மணி.
தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெயசிங், காலை 10:00 மணி.
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு: ஏ.வி.என்., ஆரோக்ய ஆயுர்வேத மருத்துவமனை, மதுரை, மதியம் 3:30 மணி.
ஹிந்தி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர்,மதுரை, பயிற்சியளிப்பவர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
கண்காட்சி
பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள்,வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.