ADDED : ஆக 11, 2024 04:40 AM
கோயில்
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதிகளில் தங்கச் சப்பரத்தில் அம்மன் உலா, காலை 9:00 மணி, சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை, வெள்ளி, யானை, குதிரை வாகனங்களில் ஆவணிமூல வீதிகளில் உலா, மாலை 4:00 மணி, ஆடி வீதிகளில் புஷ்பப் பல்லக்கில் அம்மன் உலா, இரவு 7:00 மணி.
24ம் ஆண்டு உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, உற்ஸவ அம்மன் பூப்பல்லாக்கில் ஊர்வலம், மாலை 5:00 மணி.
மாதாந்திர உழவாரப்பணி: கூடலழகர் கோயில், மதுரை, ஏற்பாடு: கோயில் கிளை கமிட்டி, நகர் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
கருப்பண சுவாமிக்கு சந்தன சாத்துபடி திருவிழா: கன்னிமார் கோயில், தென்பரங்குன்றம், மறுபூஜை வைபவம், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கனக விழா: நவநீதக்கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, ருக்மணி, சத்தியபாமா நவநீதக்கண்ணன் புறப்பாடு, காலை 6:30 மணி, ருக்மணி, சத்யபாமா நவநீதக்கண்ணன் திருக்கல்யாணம், காலை 9:00 மணி, விருந்து, மதியம் 1:00 மணி, கிருஷ்ணா அமிர்த பஜன் மண்டலியாரின் நாம சங்கீர்த்தனம், மாலை 4:00 மணி, நவநீதக்கண்ணன் எம்.ஏ.வி.எம்.எம்., பள்ளியில் இருந்து புறப்பட்டு சன்னதி சென்றடைதல், இரவு 7:00 மணி, ஆஞ்சநேயர் உற்ஸவம், இரவு 8:30 மணி.
காயத்ரி மகா யக்ஞம் - 49ம் ஆண்டு விழா: ஸத் சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, கணபதி ஹோமம், அதிகாலை 4:30 மணி, கோ பூஜை, காலை 7:00 மணி, தேவி மஹாத்மீயம், காலை 8:30 மணி, காயத்ரி ஹோமம், பாராயணம், காலை 9:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
இன்பமே எந்நாளும்: நிகழ்த்துபவர் - கணேசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
திருவாசகம் முற்றோதுதல்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்னவானந்தர், மாலை 5:45 மணி.
ஸத்ஸங்கம், கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:00 மணி.
பொது
'மா மதுரை' விழா - அலங்கார ஊர்திகள், கலைஞர்கள், கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடனான கலை அலங்கார அணிவகுப்பு: தெப்பக்குளத்தில் துவங்கி கணேஷ் தியேட்டர், ஆவின் சந்திப்பு வழியாக கே.கே.நகர் ஆர்ச் வரை, ஏற்பாடு: கான்பிடரேஷன் ஆப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ், யங் இந்தியன்ஸ், மதியம் 3:00 மணி.
மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் 50ம் ஆண்டு தமிழ் இசைப் பொன்விழா, ராஜா முத்தையாவின் 120வது பிறந்தநாள் விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, கலாகேந்திரா ஆர்ட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி இயக்குனர் ஸ்ரீ அம்சினி, மாணவிகள் வழங்கும் நாட்டிய நாடகம், மாலை 5:15 மணி, குடந்தை மாலியின் 'மகான் ஸ்ரீ நாராயண குரு' நாடகம், மாலை 6:45 மணி.
மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை - 20ம் ஆண்டு விழா: ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் ஹால், கே.கே.நகர், மதுரை, தலைமை: தலைவர் முத்தம்பெருமாள், சிறப்பு விருந்தினர்: விஜய் வசந்த் எம்.பி., உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தாயுமானசுவாமி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி, காலை 9:00 மணி.
மதுரை பலசரக்கு, சில்லரை வணிகர் சங்கத்தின் 77வது ஆண்டு விழா: துரையப்ப நாடார் - தேனம்மாள் திருமண மண்டபம், தெப்பக்குளம், மதுரை, தலைமை: தலைவர் பால்ராஜ், சிறப்பு விருந்தினர்கள்: பூமிநாதன் எம்.எல்.ஏ., 53வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், மதுரை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் மாதவன், கல்வியாளர் சுந்தரவேல், ஐ.டி.டி.சி., தொழில் வணிக மேம்பாட்டு மைய சேர்மன் சூரஜ் சுந்தரசங்கர், மாலை 5:00 மணி.
'உளி ஓவியங்கள் - மதுரை புதுமண்டப புடைப்புச் சிற்பங்களின் கோட்டோவியங்கள்' நுால் வெளியீட்டு விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: குமார் மெஸ் உரிமையாளர் ராமச்சந்திரக்குமார், சிறப்பு விருந்தினர்கள்: மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளர் சாந்தலிங்கம், தமிழ் பதிப்பை வெளியிடுபவர்: பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஆங்கில பதிப்பை வெளியிடுபவர்: பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, மாலை 6:00 மணி.
விக்ரம் எழுதிய 'கச்சேரி மாயக்கா' - நுால் வெளியீட்டு விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: கிளைத் தலைவர் காமாட்சி, வெளியிடுபவர்: செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், ஏற்பாடு: த.மு.எ.க.ச., காலை 10:00 மணி.
12ம் ஆண்டு முப்பெரும் விழா, பொதுக்குழு கூட்டம்: மீனாட்சி மகால், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் திருமுருகன், துவக்கி வைப்பவர்: அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, ஏற்பாடு: தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நலச்சங்கம், காலை 9:00 மணி.
சிறுதானிய உணவுத் திருவிழா: போத்தீஸ் குடோன், ஆவின் பண்ணை அருகில், மதுரை, ஆடிப்பட்டம் தேடி விதை - கருத்தரங்கு: சிறப்புரை - தேன்கனி நாராயணன், காலை 11:00 மணி, சிறுதானிய இயற்கை உணவுப் போட்டி, மதியம் 1:00 மணி, சிறுதானிய சமையலை மதிப்புக்கூட்டல் செய்பவர்: தானியக் குடில் கார்த்திகேயன், ஏற்பாடு: தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, மதியம் 3:00 மணி.
'மதுரை ரன் 2024' - மாரத்தான்: காந்தி மியூசியம், மதுரை, துவக்கி வைப்பவர்: தளபதி எம்.எல்.ஏ., காலை 6:00 மணி, நிறைவு விழா விருந்தினர்கள்: மஹன்யாஸ் நிர்வாக இயக்குனர் கணேசன், பாரதி மருத்துவமனை சேர்மன் ஆழ்வார் ராமானுஜம், சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பூர்ணிமா வெங்கடேஷ், ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 9:30 மணி.
பசுமை செயற்பாட்டாளர் ரவிச்சந்திரன் நினைவேந்தல் நிகழ்ச்சி - நினைவஞ்சலி, படத்திறப்பு, நுால் வெளியீடு: ரவிச்சந்திரன் இல்லம், அரிட்டாபட்டி, பங்கேற்பு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், முகிலன், பாமயன், முத்துகிருஷ்ணன், ராமலிங்கம், பத்ரி நாராயணன், நாகரத்தினம், மதியம் 3:00 மணி.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: சிலோன் சிட்டி ஸ்டோர் அருகில், மோதிலால் மெயின் ரோடு, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
மருத்துவம்
இலவச இதயம், கண், காது பரிசோதனை, மருத்துவ ஆலோசனை முகாம்: அரசு உயர்நிலைப்பள்ளி, கொ.புளியங்குளம், மதுரை, தலைமை: தலைவர் ஜெயராஜசேகர், துவக்கி வைப்பவர்: ஊராட்சி தலைவர் சிவகாமி தர்மர், ஏற்பாடு: ஏ.என்.டி., கல்வி, மருத்துவ, சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.
விளையாட்டு
15 வயதிற்குட்பட்ட இறகுப்பந்து போட்டி: டெம்பிள் சிட்டி பேட்மின்டன் கிளப், மதுரை, தலைமை: மதுரை மாவட்ட பேட்மின்டன் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணி, சிறப்பு விருந்தினர்கள்: பா.ம.க., தலைவர் 1அன்புமணி எம்.பி., 'யஸ்' சேர்மன் நீதிமோகன், ஏற்பாடு: மதுரை மாவட்ட பேட்மின்டன் சங்கம், தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம், காலை 11:30 மணி முதல்.
கண்காட்சி
சிட்கான் 7வது சவுராஷ்டிரா தொழில் வர்த்தக கண்காட்சி நிறைவு விழா: மடீட்சியா, மதுரை, பங்கேற்பு: முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், பா.ஜ., தேசிய கவுன்சில் உறுப்பினர் மகாலட்சுமி, வழக்கறிஞர் திலீபன் சக்கரவர்த்தி, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பி.என்.ஐ., சாணக்கியாஸ், தக் ஷா பர்னிச்சர் வழங்கும் ஆதிரை அழைக்கிறாள் மெகா கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி.
ஹஸ்டகாலா - கைவினைப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.