ADDED : ஏப் 10, 2024 05:40 AM
கோயில்
வருஷாபிஷேகம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், ஹவுசிங்போர்டு, மேலஅனுப்பானடி, மதுரை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.
பங்குனித் திருவிழா- முளைப்பாரி ஊர்வலம், ராக்காயி அம்மன் கோயில், உறங்கான்பட்டி, காலை 11 :00 மணி.
அக்னி சட்டி எடுத்தல், காரை குத்தம்மன் கோயில், அலங்கம்பட்டி, காலை 8:00 மணி.
பங்குனி பொங்கல் திருவிழா: மந்தையம்மன் கோயில், நாராயணபுரம், மதுரை, பொங்கல், மாவிளக்கு, அபிேஷகம், அக்னி சட்டி எடுத்தல், சக்திகரகம் எடுத்தல், காலை 5:00 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணி.
நாராயணீயம் பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கருத்தரங்கு:, எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிரா வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, மதுரை, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், சிறப்பு விருந்தினர்: அருளானந்தர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் மபெல் ஜோஷ்லின், ஏற்பாடு: வேதியியல் துறை, காலை 11:00 மணி.
புரிந்துணர்வு ஒப்பந்தம், புதிய படிப்பு அறிமுகம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி சேர்மன் ஹரி தியாகராஜன், விருந்தினர்: சி.எம்.டி.ஏ., செயலர் அன்சுல் மிஷ்ரா, அகமதாபாத் சி.இ.பி.டி., பல்கலை தலைவர் பர்ஜோர் மேத்தா, காலை 10:00 முதல் 11:15 மணி வரை.
ரத்ததான முகாம்: வைகை பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சிவரஞ்சனி, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., ரெட் ரிப்பன் கிளப், யூத் ரெட் கிராஸ், மேலுார், மதுரை அரசு மருத்துவமனைகள், காலை 9:30 மணி.
பட்டமளிப்பு விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் குணசேகரன், காலை 11:00 மணி.
பொது
மன அமைதி, உடல் ஆரோக்கியத்திற்கான 2 மாத கோடைக்கால யோகா பயிற்சி தொடக்க விழா: ஐ.ஜி.எஸ்.ஆர்., அரங்கம், காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தா ராவ், சிறப்பு விருந்தினர்: மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஜெயா, காலை 10:30 மணி.
சங்க நிர்வாகிக்கு பாராட்டு விழா: ஆர்.ஏ.கே. அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, பாராட்டு பெறுபவர்: சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஷாகுல் ஹமீது, பாராட்டுபவர்கள்: மாநிலத் தலைவர் ரங்கராஜ், பொதுச் செயலாளர் மோகன், பெருளாளர் மாதவன், ஏற்பாடு: ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், காலை 10:00 மணி.
யோகா, தியானம்
இலவச மூச்சு, தியானப் பயிற்சி: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 முதல் 7:00 மணி வரை.

