ADDED : ஆக 27, 2025 12:56 AM
விநாயகர் சதுர்த்தி
முக்குறுணி விநாயகர் சன்னதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, 54 படி அரிசி மாவு கொழுக்கட்டை படையல், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 7:00 மணி.
நாவலர் நகர் 1வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு வழிபாடு, காலை 7:45 மணி, பால விநாயகர் பூஜை, இரவு 7:00 மணி.
பொதுச் சாவடி, புதுவிளாங்குடி, மதுரை, சிலை பிரதிஷ்டை, தலைமை: பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், காலை 6:30 மணி, சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்குதல், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 10:30 மணி முதல்.
நந்தவன விநாயகர் கோயில், இந்திரா நகர், காமராஜபுரம், மதுரை, 7 அடி உயர சிலை வழிபாடு, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 6:00 மணி முதல்.
கல்யாண இன்ப விநாயகர் கோயில் சார்பில் கண்ணா போர்டிங், முனிச்சாலை பகுதியில், 5 அடி உயர சிலை வழிபாடு: சிறப்பு பூஜை, அலங்காரம், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 6:00 மணி முதல், வீதியுலாவை துவக்கி வைப்பவர்: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், தலைமை: கவுன்சிலர் ரூபிணி குமார், மாலை 5:00 மணி.
ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, விநாயகர் அகவல் பாராயணம், சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் வளாகம், மதுரை, சிறப்பு ஹோமங்கள், காலை 8:00 மணி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 9:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், ஆவின்நகர், 6வது மெயின் ரோடு, கோமதிபுரம் விரிவாக்கம், மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 7:45 மணி.
மல்லிகை விநாயகர், பாலமுருகன், தையல் நாயகி, சமேத வைத்தீஸ்வரர், பரிவார தெய்வங்கள் கோயில், டி.என்.எச்.பி., காலனி, மல்லிகை நகர், ஆனையூர், மதுரை, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், தங்கக்கவச அலங்காரம், தீபாராதனை, காலை 6:00 மணி, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, நடனப் போட்டி, மதியம் 3:00 மணி, சந்தனக் காப்பு அலங்காரம், மாலை 5:00 மணி, கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி,
செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, காலை 7:45 மணி.
சித்தி விநாயகர் கோயில், கோச்சடை, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 7:45 மணி.
வரசக்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
காட்டுப் பிள்ளையார் கோயில், பீ.பி.குளம், மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
வில்வ மரத்தடி விநாயகர் சன்னதி, முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, சிறப்பு அலங்காரம், அபிஷேகம், காலை 7:00 மணி.
கோயில்
ஆவணி மூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆவணி மூல வீதிகளில் தங்கச்சப்பரம், நாரைக்கு முக்தி கொடுத்தல், காலை 9:00 மணி, சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் உலா, இரவு 7:00 மணி.
கும்பாபிஷேகம்: முச்சந்தி மஹா கணபதி கோயில், எல்லீஸ்நகர், மதுரை, விக்னேஸ்வர பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை, கணபதி நமாவளி, அதிகாலை 5:00 மணி, விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், காலை 6:30 மணி, அன்னதானம், காலை 11:00 மணி.
கும்பாபிஷேகம்: யோக விநாயகர், நாக துர்க்கை அம்பிகை கோயில், முத்துப்பட்டி, திருப்பரங்குன்றம், முதல் கால யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், காலை 6:30 மணி, 2ம் கால யாகசாலை பூஜைகள், மஹா கணபதி பூஜை, மாலை 6:00 மணி, எந்திர பிரதிஷ்டை கணபதி, துர்கா மூல மந்திர ஹோமங்கள், தீபாராதனை, இரவு 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதி ராஜேந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.