ADDED : டிச 02, 2025 08:28 AM
கோயில் கார்த்திகை திருவிழா - 8ம் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், விடையாற்றி சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, காலை 10:00 மணி, நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பட்டாபிஷேகம், இரவு 7:05 மணிக்கு மேல் 7:30 மணிக்குள், தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணி.
கோ பூஜை: வீரகாளியம்மன் கோயில், கீழவளவு, காலை 6:00 மணி, பூத்திருவிழா, மாலை 4:00 மணி.
பிரதோஷ பூஜை: காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, நந்தி, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மாலை 4:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: லலிதா, முன்னிலை: சுப்பிரமணியன், விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
பெரிய புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி கட்டுரையாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: உதவி பேராசிரியர் பரமசிவன், முன்னிலை: துறைத்தலைவர் காந்திதுரை, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 11:40 மணி.
பொது எச்.ஐ.வி., எய்ட்ஸ் ஆராய்ச்சி குறித்து சர்வதேச கருத்தரங்கம்: ஐ.எம்.ஏ., ஹால், அரசு மருத்துவக் கல்லுாரி வளாகம், மதுரை, தலைமை: கல்லுாரி ஓய்வு பெற்ற மருந்தியல் துறை பேராசிரியர் முருகேஷ், ஏற்பாடு: ஆன்டிவைரல் ரிசர்ச் சொசைட்டி (ஏ.வி.ஆர்.எஸ்.,), காலை 9:00 மணி.
ஆண்டுவிழா, கிறிஸ்துமஸ், சிறப்பு ஒலிம்பிக் வெற்றியாளர்களை கவுரவப்படுத்துதல் - முப்பெரும் விழா: சந்திரா திருமண அரங்கு, பழங்காநத்தம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: மாவட்ட நீதிபதி ஜெயகுமாரி ஜெமி ரத்னா, வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி வடமலையான், இயக்குநர் டாக்டர் அஸ்வின், இந்திய வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சாமிதுரை, குயின் மீரா சர்வதேச பள்ளி நிர்வாக இயக்குநர் அபிநாத் சந்திரன், டாக்டர் வினோத் போஸ், நிதிலா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மாலை 6:00 மணி.
பேச்சாளர் கூட்டம்: ஓட்டல் ஜே.சி., ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, தலைமை: வேலம்மாள் மருத்துவமனை டீன் ரத்தினவேல், ஏற்பாடு: மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம், இரவு 7:00 மணி.
பசுமை இந்தியாவை வலியுறுத்தி விதைப்பந்துகள் துாவும் நிகழ்ச்சி: அருளானந்தர் கல்லுாரி அருகில், மதுரை, ஏற்பாடு: கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், இளம் மக்கள் இயக்கம், பார்வை பவுண்டேஷன், காலை 8:00 மணி.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம்: யூனியன் கிளப் அரங்கம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, முன்னிலை: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, பங்கேற்பு: மதுரை மேற்கு ரோட்டரி சங்க செயலாளர் கிறிஸ்டோபர், செயலாளர் சண்முகம், பொருளாளர் கார்த்திக், மாலை 6:30 மணி.
அ.ம,மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்: மூவேந்தர் பண்பாட்டுக் கழக திருமண மண்டபம், மேலுார், தலைமை: பொதுச்செயலாளர் தினகரன், காலை 10:00 மணி.
விளையாட்டு இந்தியா - சுவிட்சர்லாந்து அணிகள் மோதும் ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி லீக் போட்டி: சர்வதேச ஹாக்கி மைதானம், ரேஸ்கோர்ஸ், மதுரை, துவக்கி வைப்பவர்: துணை முதல்வர் உதயநிதி, உலக ஹாக்கி தலைவர் தையூப் இக்ரம், இரவு 8:00 மணி.
கண்காட்சி மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் 'சரஸ் மேளா', உணவுத் திருவிழா: தமுக்கம், மதுரை, ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

