/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / ஜன. 31 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / ஜன. 31 க்குரியது
ADDED : ஜன 31, 2025 12:22 AM
கோயில்
தெப்பத்திருவிழா கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:05 மணிக்கு மேல் 10:29 மணிக்குள், கோயிலின் குலாலர் மண்டபத்தில் அம்மன், சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், காலை 9:00 மணி, நான்கு சித்திரை வீதிகளில் அம்மன் சிம்ம வாகனம், சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.
தெப்பத்திருவிழா 3ம் நாள் - சுவாமி தெய்வானையுடன் வீதியுலா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கச்சப்பரம், காலை 8:00 மணி, அன்னவாகனம், இரவு 7:00 மணி.
அம்ருத சஞ்ஜீவினி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சத்சங்கம், லலிதா சகஸ்ரநாமம், கீதை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, மாலை 6:00 மணி.
சுவாமி பிரம்மானந்தர் ஜெயந்தி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, ராம நாம சங்கீர்த்தனம், மாலை 5:45 மணி, சுவாமி நித்யதீபானந்தரின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி.
அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
உயர்கல்வி வழிகாட்டி, தொழில் நுட்ப கண்காட்சி: கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி, விரகனுார், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
கிராமப்புற இந்தியாவில் தொழிலாளர் வேலைவாய்ப்பில் மாறும் சூழ்நிலை: சவால்கள், உத்திகள் - தேசிய கருத்தரங்கு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: பி.டி.ஓ., மோகன், தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், பாலமுருகன், ஆசாத், கோபி, காலை 9:45 மணி.
நாடக அரங்கேற்றம்: மீனாட்சி அரசு கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் சந்திரா, கோவில்பட்டி மணல்மகுடி நாடக நிலம் இயக்குநர் முருகபூபதி, ஏற்பாடு: முதுகலை தமிழாய்வுத்துறை, காலை 10:30 மணி.
கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி பேராசிரியர் மஞ்சுளா, ஏற்பாடு: வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறை, காலை 9:45 மணி.
சைவ சித்தாந்தமும் வாழ்வியலும் - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - புலவர் பாலகிருஷ்ணன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்த்துறை,காலை 10:00 மணி, முதுகலை மாணவர்களுக்கான கருத்தரங்கு, காலை 11:50 மணி.
பொது
தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காலை 10:00 மணி.
சுய வேலைவாய்ப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி, சர்வ சமய வழிபாடு, தலைமை: செயலாளர் நந்தாராவ், மாலை 4:30 மணி.
சுகம் செவிலியர் பயிற்சி 8 வது பட்டமளிப்பு விழா: தானம் அறக்கட்டளை மைய அலுவலகம், மகபூப்பாளையம், மதுரை, தலைமை: நிர்வாக இயக்குனர் வாசிமலை, களஞ்சிய இயக்கத் தலைவி சின்னப்பிள்ளை, சிறப்பு விருந்தினர்: சித்த மருத்துவ நிபுணர் கணபதி, பங்கேற்பு: சுகம் செவிலியர் பயிற்சி மாணவிகள், ஏற்பாடு: சுகம் அறக்கட்டளை, காலை 11:30 மணி.
மகாத்மா காந்தி நினைவு நாள் சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி: காந்தியவாதி பிராங்க்ளின் ஆசாத் காந்தி, ஏற்பாடு: செப்சிரா, மாலை 6:00 மணி.
டாக்ஸ் போர்ஸ் ஹப் விழிப்புணர்வு முகாம்: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை வருமான வரித்துறை, காலை 10:30 முதல் மாலை 6:30 மணி.
கண்காட்சி
'கிரடாய் மதுரை பேர்புரோ' - கட்டடம், வீட்டடி மனை கண்காட்சி: தமுக்கம் மைதானம், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
கட்டுமான பொருட்கள், இன்டிரியர், எக்ஸ்டிரியர், ஹோம் டெக்கர்ஸ், பர்னிச்சர்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.
காட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் கண்காட்சி, விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

