/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 8 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 8 க்குரியது
ADDED : ஜூன் 08, 2025 03:57 AM
கோயில்
வைகாசி வசந்த விழா : மீனாட்சிஅம்மன் கோயில், மதுரை, சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து அம்மன், சுவாமி புதுமண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.
வைகாசி பெருந்திருவிழா 7ம் நாள்: கூடலழகர் பெருமாள் தங்க சிவிகையில் பாண்டிய வேளாளர் மஹாஜன சமூக மண்டபத்திறகு எழுந்தருளல், காலை 11:00 மணி, -மதுரை, பூச்சப்பரம் சூர்ணோற்சவம் தேரோடும் வீதி, இரவு 7:00 மணி.
வைகாசி வசந்த உற்ஸவம் 9ம் நாள் :முருகன் கோயில், சோலைமலை, அழகர் கோவில், மதுரை, சண்முகார்ச்சனை, காலை 11:00 மணி , மகா அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:30 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.
வைகாசி வசந்த உற்ஸவம்: -கள்ளழகர் கோயில், அழகர் கோவில், சிறப்பு அலங்காரம், பூஜைகள், இரவு 7:15 முதல்.
வைகாசி பிரமோற்சவம்: காளமேகபெருமாள் கோயில், திருமோகூர், பல்லக்கு, காலை 9:00 மணி , மோஹினி கோலத்தில் பக்தி உலாவுதல், இரவு 7:00 மணி, குதிரை வாகனத்தில் வீதி புறப்பாடு, இரவு 8:00 மணி.
வைகாசி விழா:- திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, அம்மனும் சுவாமியும் அலங்காரம், காலை 10:30 மணி முதல் கிருஷ்ணன், அர்ஜூனன் அலங்காரம், மாலை 6:30 மணி முதல்.
கும்பாபிஷேகம் -வேதப்ரயாணம்: சிவசக்தி விநாயகர் கோயில், ஊர்மெச்சிக்குளம், பரவை, காலை 7:40 மணிக்கு மேல், இரண்டாம் கால யாகசாலை, காலை 8:25 மணி, பூர்ணாஹூதி தீபாரதனைகள், காலை 10:40 மணி, கும்பாபிஷேகம், காலை 11:00 மணி, அபிஷேகம், காலை 11:40 மணிக்கு மேல்.
வைகாசி விழா - மாரியம்மன் திண்டுக்கல் மேலப்பேட்டை உறவின்முறையார் மண்டகப்படி சேர்தல், - பத்ரகாளி மாரியம்மன், திருமங்கலம், காலை 8:00 மணி, புஷ்பச்சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம், இரவு 11:00 மணி.
குருபூஜை விழா: மதுரை ஆதின மடம், தெற்கு ஆவணி மூல வீதி, மதுரை, விநாயகர், சொக்கநாதப்பெருமான் வழிபாடு, காலை 5:45 மணி, அடியவர் வழிபாடு, மதியம் 1:00 மணி, திருமுறை விண்ணப்பம், மாலை 6:30 மணி, மதுரை ஆதினம் அருளுதல், மாலை 6:45 மணி, விருது வழங்குதல், இரவு 8:00 மணி, சிறப்பு சொற்பொழிவு - - பேராசிரியை விஜயலட்சுமி, மகிழ்வும், வாழ்த்தும், இரவு 8:15 மணி.
பிரதோஷ விழா, நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயில், மாலை 4:30 மணி.
ஞாயிறு ஆராதனை : கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தோன்றின் புகழோடு தோன்றுக: நிகழ்த்துபவர் - - சத்யா, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி முதல், சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.
சத்ஸங்கம் : நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.
பொது
பா.ஜ., மாநில நிர்வாகிகள் கூட்டம் : வேலம்மா திடல், ஒத்தக்கடை, மதுரை, பங்கேற்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாக்கிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மாலை 6:00 மணி.
வெற்றி அறக்கட்டளை துவக்க விழா : தங்கம் கிராண்ட் ஓட்டல், காளவாசல், மதுரை, சிறப்பு விருந்தினர்: அ.தி.மு.க., மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், பேச்சாளர் மதுரை முத்து, நடிகை கவுதமி, குத்துவிளக்கு ஏற்றுபவர் : அறக்கட்டளை நிறுவனர் விஜயலட்சுமி, மாலை 6:00 மணி.
24வது அகில இந்திய மார்க்சிஸ்ட் மாநாடு,- செந்தொண்டர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி: நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மஹால், மதுரை, தலைமை: மாவட்டக்குழு செயலாளர் ராஜேந்திரன், பங்கேற்பு: மாநில செயலாளர் சண்முகம், ஏற்பாடு : புறநகர் மாவட்டக்குழு, மாலை 4:00 மணி.
மகா பெரியவா ஜெயந்தி விழா - சென்னை சிறுவன் சூரியநாராயணனின் -இசைக் கச்சேரி: வசுதாரா குடியிருப்பு வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, வயலின் - நெல்லை ரவீந்திரன், மிருதங்கம் - மதுரை நாராயணன், மோர்சிங் - திருமுருகன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
தியானம்
ராஜயோக தியான பயிற்சி : பிரஜா பிரதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், சத்திரப்பட்டி, மதுரை, மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.