ADDED : மார் 01, 2024 06:43 AM
கோயில்
கும்பாபிஷேகம் : வெக்காளியம்மன் கோயில், கேட்டுக்கடை, அலங்காநல்லுார், காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், அன்னதானம் காலை 11:00 மணி.
முகூர்த்த கால் நடுதல், காப்பு கட்டுதல்: அங்காள பரமேஸ்வரி கோயில், மார்க்கெட் வீதி, திருமங்கலம், காலை 7:30 மணி.
பசுபதீஸ்வரர் மங்கள பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி
வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு விழா, ஆண்டு விழா: பள்ளி வளாகம், மதுரை, தலைமை: தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை, பங்கேற்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்பாபு, துாத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் பிரபு, காலை 9:30 மணி முதல்.
மாநில அளவிலான கல்லுாரி அலுவலக பெண்களுக்கான எறிபந்து போட்டி - நிறைவு விழா: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலைராஜா, பங்கேற்பு: முதல்வர் கிறிஸ்டியானா சிங், டி நொபிலி மெட்ரிக் பள்ளி தாளாளர் அடைக்கலராஜ், மாலை 4:00 மணி.
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி 30ம் ஆண்டு விழா: கல்லுாரி வளாகம், மதுரை, பங்கேற்பு: வடமலையான் மருத்துவமனை தலைவர் டாக்டர் புகழகிரி, போலீஸ் துணைகமிஷனர் குமார், காலை 10:30 மணி.
ஆலாத்துார் பள்ளி மாணவர்களுக்கு கணினியை கையாளும் திறன் குறித்த பயிற்சி: சிச்சிலுப்பை, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி கணினி அறிவியல் பிரிவு, காலை 10:00 மணி.
திறன் மேம்பாட்டு பயிற்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பேசுபவர்: சூரிய பிரசன்னா, மதுரை கைனட் கார்ப்பரேட் நிர்வாக இயக்குனர், ஏற்பாடு: கணினித் துறை, காலை 9:00 மணி.
பொது
தொழில் முனைவோருக்கான அரசு மானியங்கள், கடனுதவி குறித்த கருத்தரங்கம்: மடீட்சியா, மதுரை, தலைமை: தலைவர் லட்சுமி நாராயணன், பங்கேற்பு: ஓய்வுபெற்ற தொழில் வணிகத்துறை உதவி இயக்குநர் சிவ அய்யணன், ஏற்பாடு: மடீட்சியா வர்த்தக தகவல் மையம், மாலை 4:30 மணி.
சர்வசமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், பங்கேற்பு: அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சுமதி அன்னலதா, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
பா.ஜ., சார்பில் திருமங்கலம் தொகுதியில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா: ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு அலுவலகம், டோல்கேட் அருகில், கப்பலுார், தலைமை: மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், திறப்பாளர்: மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள், காலை 9:00 மணி.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் ஆலோசனைக்கூட்டம்: ஓட்டல் ஜே.சி. ரெசிடென்சி, மதுரை, மாலை 6:30 மணி.

