ADDED : நவ 10, 2024 04:21 AM
கோயில்
திருக்கார்த்திகை உற்ஸவம் - கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 11:05 முதல் 11:29 மணிக்குள்.
300வது மாத உழவாரப்பணி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூத்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், பங்கேற்பு: ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமிகள், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:00 மணி.
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள் - உறவும், பிரிவும்: நிகழ்த்துபவர் - கணேசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
அரவிந்தரின் சாவித்திரி: நிகழ்த்துபவர் - பேராசிரியர் சத்ய சாய், அரபிந்தோ சொசைட்டி, லைக்கோ கட்டடம், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, காலை 11:00 மணி.
நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23 டி. சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.
பள்ளி, கல்லுாரி
பொன்விழா சங்கமம் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சவுராஷ்டிரா உயர்நிலைப்பள்ளி, தெற்காவணி மூல வீதி, மதுரை, தலைமை: தாளாளர் ஜெகன்னாத், சிறப்பு விருந்தினர்: ஓய்வு பெற்ற கூடுதல் கருவூல அதிகாரி ரவீந்திரநாத், டாக்டர் சண்முகநாதன், பங்கேற்பு: 1973-74ல் பத்தாம் வகுப்பு பயின்றவர்கள், ஏற்பாடு: பொன்விழாக் குழு, காலை 10:30 மணி.
பொது
பத்து பார்வையற்றோர் உட்பட 40 கலைஞர்கள் பங்குபெறும் 'அருணாச்சலம் ரிக் வேதம் முதல் ரமண மகரிஷி வரை' - நாட்டிய நாடகம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, கருத்து, இயக்கம்: ஆர்.எம்.சி.எல்., தலைவர் சாரதா, சென்னை ஆர்.ஏ.எஸ்.ஏ., நிறுவனர் அம்பிகா காமேஷ்வர், ஏற்பாடு: ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், மாலை 6:00 மணி.
எஸ்.எம்.ஜே., வர்ணம் - செந்தில் முருகன் ஜூவல்லரியின் புதிய டிசைனர் ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா: சினிப்பிரியா தியேட்டர் எதிரில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி.
திருப்புகழ் இன்னிசை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, குரல் - சம்பந்தம் குருக்கள், வயலின் - ரவீந்திரன், மிருதங்கம் - தியாகராஜன், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
புகழ்பெற்ற மருத்துவர்கள் பங்குபெறும் 'இமேஜிங் நுண்ணறிவு' குறித்து கருத்தரங்கு: ப்ரீத்தி மருத்துவமனை, உத்தங்குடி, தலைமை: டாக்டர் ஹேமா சிவக்குமார், பங்கேற்பு: இயக்குநர் டாக்டர் சிவக்குமார், ஏற்பாடு: மகப்பேறு, மகளிர், குழந்தை நல மருத்துவம், கதிரியக்கவியல் துறை, காலை 9:00 மணி.
ஆதரவற்ற முதியோர்களுக்கு கம்பளி போர்வை வழங்குதல்: நகர்ப்புற வீடற்ற ஏழைகள் இல்லம், கீரைத்துறை, மதுரை, ஏற்பாடு: படிக்கட்டுகள் அமைப்பு, காலை 10:00 மணி.
எழுத்தாளர் தமிழ்வாணன் நினைவலைகள் - கலந்துரையாடல்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், மாலை 5:00 மணி.
உலக சாதனைக்கான யோகா, பரதநாட்டிய போட்டி: அக்னஸ் சுந்தர் மெட்ரிக் பள்ளி, காளிகாப்பான், மதுரை, காலை 8:00 மணி.
மருத்துவம்
இலவச கண் சிகிச்சை முகாம்: ஏ.பி.வி.பி., அலுவலகம், 4 -ஏ, ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் தெரு, முனிச்சாலை, மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் அனில்குமார், பிரவீன் குமார், ராஸ்மி பிரவீன், ஏற்பாடு: பேராசிரியர் பரமசிவன் நினைவு வாராந்திர இலவச மருத்துவ மையம், டாக்டர் அனில்குமார் கண் மருத்துவமனை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
இலவச மருத்துவ முகாம்: ஆறுமுகம் இல்லம், ரோஜா வீதி, ஐ.ஓ.சி., நகர், விளாங்குடி, பங்கேற்பு: டாக்டர்கள் கீர்த்தனா, சந்திரசேகர், ஏற்பாடு: ஐ.ஓ.சி., நகர், ராமுனி நகர் குடியிருப்போர் கூட்டமைப்பு, வி.கரிசல்குளம் ஆரம்ப சுகாதார மையம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு
15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட ஹேண்ட் பால் சங்கம், காலை 6:30 மணி.