ADDED : நவ 19, 2025 05:30 AM
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு அன்னை சாரதா தேவியின் வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண சமாஜம், பங்கஜம் காலனி, மதுரை, மாலை 6:30 மணி.
திருவிளையாடல் புராண விரிவுரை நிறைவு விழா: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, முன்னிலை: கோயில் இணை கமிஷனர் சுரேஷ், சிறப்புரை: சொ.சொ.மீ.சுந்தரம், திருப்புகழ் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குபவர்: ஆடிட்டர் கார்த்திக் ராகவமூர்த்தி, இரவு 7:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி பொறியாளர்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த கருத்தரங்கம்: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரி முன்னாள் பொருளாதார பேராசிரியர் முத்துராஜா, ஏற்பாடு: மாணவர் பாதுகாப்பு மையம், காலை 11:00 மணி.
பொது தமிழிசை விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிவக்குமார் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை : தவில் - கிருஷ்ணமூர்த்தி, வைரமுத்து, தாளம் - கோபால், மதியம் 3:00 மணி, வீணா வெங்கட்ரமணி குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி: மிருதங்கம் - கவுசிக் ராஜகோபால், கஞ்சிரா - சிவராமகிருஷ்ணா, மாலை 4:00 மணி, ஏற்பாடு: மண்டல கலை பண்பாட்டு மையம், ஸ்ரீனிவாசனின் தமிழ் இன்னிசை நிகழ்ச்சி: வயலின் - ஞானதேவ் பப்பு, மிருதங்கம் - சூர்ய நம்பீசன், மாலை 6:00 மணி.
காசி தமிழ் சங்கமம் 4.0 இலவச முன்பதிவு குறித்த விழிப்புணர்வு: ராகவ் நிகேதன், கூடல் நகர் 4 வது தெரு, மதுரை, ஏற்பாடு: ஒருங்கிணைப்பாளர் நடராஜன், இரவு 7:00 மணி.
பொது 58 வது தேசிய நூலக வார விழா: மாவட்ட மைய நுாலகம், சிம்மக்கல், மதுரை, தலைமை: மாவட்ட நூலக அலுவலர் பாலசரஸ்வதி, புத்தக கண்காட்சியை திறந்து வைப்பவர்: ஆர்.டி.ஓ., கருணாகரன், எழுத்தாளர் அ.ஈஸ்வரன் நுால் வெளியீடு, வெற்றிபெற பெரிது தேவை நூல்களா...இல்லை வலைதளங்களா... பட்டிமன்றம், ஏற்பாடு: மாவட்ட மைய நூலகம், மாலை 5:00 மணி.
மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, திரவுபதி அம்மன் கோயில் தெரு, புதுமாகாளிப்பட்டி ரோடு, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.
கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க கிளைகள், 141, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.

