/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி // நவ. 2 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி // நவ. 2 க்குரியது
ADDED : நவ 02, 2024 06:29 AM
கோயில்
கோலாட்ட உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் ஆடி வீதியில் வலம் வந்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்திய பின் கொலுச்சாவடி சேர்த்தியாதல், மாலை 6:00 மணி, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 8:00 மணி.
கந்த சஷ்டி விழா - முதல் நாள்: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், விக்னேஸ்வர பூஜை, காப்பு கட்டுதலுடன் யாகசாலை பூஜை துவக்கம், காலை 7:00 மணி, சண்முகார்ச்சனை, காலை 10:00 மணி, அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருமுருகாற்றுப்படையை நக்கீரருக்கு தந்தருளும் சந்தன அலங்காரம், காலை 11:00 மணி.
கந்த சஷ்டி விழா - முதல் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், யாகசாலை பூஜை, காப்பு கட்டுதல், காலை 7:00 மணி, பக்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சித்ரா கணபதி, மாலை 6:00 மணி, கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளின் பக்தி இன்னிசை, இரவு 8:00 மணி.
கந்த சஷ்டி விழா - முதல் நாள்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், முத்தங்கி அலங்காரம், காலை 9:30 மணி, லட்சார்ச்சனை, மாலை 4:00 மணி, தங்கம்மா திருமலையப்பன் வாய்ப்பாட்டு, மாலை 6:00 மணி, கலை நர்த்தனாலயா, குருதிலகம் நாட்டிய பள்ளியின் பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.
புரட்டாசி மாத திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, அம்மன் மஞ்சள் நீராடி நகர்வலம் வருதல், மதியம் 3:00 மணி, அம்மனின் ஆபரணப் பெட்டி மங்கல வாத்தியங்களுடன் ஆஸ்தானம் சேருதல், இரவு 8:00 மணி.
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு: சஷ்டி கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகள் பாராயணம், நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
அனுஷ வைபவத்தை முன்னிட்டு மகா பெரியவர் மகிமை சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், எஸ்.எம்.கே., திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
ஹிந்தி மொழி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, நிகழ்த்துபவர் - காந்தி மியூசிய அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.