ADDED : நவ 24, 2025 07:10 AM
கோயில்
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி செயற்கை நுண்ணறிவில் முத்திரை சிறப்பு மைய துவக்க விழா: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: இன்டெல் இந்தியா சீனியர் திட்ட மேலாளர் சலோனி சிங்கால், சிறப்புரை: இன்டெல் பயிற்சியாளர் அஸ்வதி, முன்னிலை: கல்லுாரி இயக்குநர் ராஜ்குமார், முதல்வர் அல்லி, ஏற்பாடு: கணினிஅறிவியல், பொறியியல் துறை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பொது அஸ்மிதா லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 14 வயது, 16 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பதிவு முகாம்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 8:00 மணி, ஜூனியர் மாநில அஸ்மிதா லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு காசோலை வழங்குதல், ஏற்பாடு: மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய தடகள சங்கம், மதுரை தடகள சங்கம், காலை 9:30 மணி.
கண்காட்சி மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி சந்தைப்படுத்தும் சரஸ் மேளா உணவுத் திருவிழா: தமுக்கம், மதுரை, ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க கிளைகள், 141, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2 வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.

