ADDED : செப் 18, 2025 05:58 AM
கோயில் குபேர சாய்பாபாவிற்கு கூட்டு பாராயணத்துடன் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.
ஜெயந்தி, நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, ராஜாங்க அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணி.
ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, ராஜாங்க அலங்காரத்தில் பல்லக்கில் சுவாமி வீதியுலா, காலை 8:00 மணி, கன்றால் விளா எறிந்த திருக்கோலம், மாலை 4:00 மணி, சேஷ வாகனம், இரவு 7:10 மணி.
குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவரின் வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு ஜகம் புகழும் ஜகந்நாதர்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
திருவிளையாடல் புராணத்தில் தமிழ்ச்சங்கம்: நிகழ்த்துபவர் - மையத் தலைவர் சந்திரசேகரன், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சந்திரன், ஏற்பாடு: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், காலை 10:30 மணி.
அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி இந்திய வர்த்தகம் குறித்து தேசிய கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்கள்: திருப்பதி அரசுக் கல்லுாரி பேராசிரியர் வெங்கடராமனைய்யா மலெபட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர் விநாயகமூர்த்தி, காலை 10:30 மணி.
'பிரில்ஸ் 2025' - கல்லுாரிகளுக்கு இடையேயான நிகழ்ச்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாத்திமா மேரி, செயலாளர் இக்னேஷியஸ் மேரி, சிறப்பு விருந்தினர்கள்: பாலாஜி, கல்லுாரி துணை முதல்வர் பிந்து ஆண்டனி, ஏற்பாடு: எம்.பி.ஏ., துறை, காலை 10:00 மணி.
'புல் ஸ்டேக்' பவுண்டேஷன் குறித்து பயிற்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: ஓபன்ஜென் எக்ஸ் டெக்னாலஜிஸ் பாரதி, கார்த்திக் குமார், ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பத் துறை, காலை 10:30 மணி, திரிசாரணியர் நிபுன்நிலை பயிற்சி முகாம், சிறப்பு விருந்தினர்கள்: வயது வந்தோர் வளங்கள் மாநில கமிஷனர் அலமேலு, ஏற்பாடு: திரிசாரணியர் இயக்கம், காலை 9:30 மணி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், உள்ளடக்க எழுதுதலின் முதல் படி - பயிற்சி, சிறப்பு விருந்தினர்: மார்க்கெட்டர் வெற்றி மைகேல்ராஜ், ஏற்பாடு: தகவல் தொடர்பு ஆங்கிலத்துறை, காலை 10:00 மணி.
பொது தொண்டு நிறுவன, சமய அறக்கட்டளைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி: வருமான வரித்துறை அலுவலகம், பீபிகுளம், மதுரை, காலை 10:00 மணி.
முன்னேற்ற மேம்பாடு அபிவிருத்தி கூட்டுறவை செயல்படுத்துதல் - கூடலரங்கம்: தானம் அறக்கட்டளை அலுவலகம், கென்னட் குறுக்குத் தெரு, மகபூப்பாளையம், மதுரை, காலை 10:00 மணி.
தமிழ்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் பர்வீன் சுல்தானா, சிறப்புரை: அண்ணா பேரவை தலைவர் செம்பியன், காலை 10:30 மணி.
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், சுப்பிரமணியபுரம் பவர்ஹவுஸ், மதுரை, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.