ADDED : செப் 28, 2025 02:53 AM
நவராத்திரி விழா ருத்ரபசுபதியார் அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, அம்மன் அருள் தலைப்பில் திருமலைசாமியின் சொற்பொழிவு, மாலை 5:30 மணி, கலை விழா, காலை 8:00 மணி முதல்.
கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண சுந்தரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:30 மணி முதல்.
கூடலழகர் கோயில், மதுரை, உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் மதுரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, கொடிமர மண்டபம் முன் வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி.
மகிஷாசூரமர்த்தினி அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி.
விநாயகர் ஞானப்பழம் பெறுதல் அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
காமாட்சி அலங்காரம்: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, கொலு மண்டபத்தில் அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.
கீதா உபதேசம் அலங்காரம்: நவநீத கிருஷ்ணன் கோயில், பால்மால் குறுக்குத்தெரு, மகால் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி முதல்.
ஷீராப்தி சயனம் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, கமலாலயா நாட்டிய கேந்திரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:30 மணி முதல்.
சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விஷேச அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, இன்னிசைக் கச்சேரி: தமிழிசை சங்கக் குழுவினர், தலைமை: ஓய்வு ஐ.ஆர்.எஸ்., அதிகாரி மோகன் காந்தி, இரவு 7:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கொலு வைத்தல், சிறப்பு பூஜை, காலை 10:00 மணி.
லலிதாம்பாள் அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காளபரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.
ஆண்டாள் அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.
திரவுபதி அம்பாள் அட்சயப்பாத்திரம் சூரிய பகவானிடமிருந்து பெறும் அலங்காரம்: திரவுபதி அம்பாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
தேவி தபசு அலங்காரம்: தேவி முத்தாலம்மன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, சிவாலயா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.
மதுரை நகரத்தார் விடுதியில் சுவாமிக்கு புவனேஸ்வரி அலங்காரம், ஆராதனை, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.
அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, கொலு வைத்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, கூட்டு வழிபாடு, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி விசாலாட்சி, மாலை 5:00 மணி.
சிவசக்தி அவங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி முதல், நவராத்திரி விசேஷ பூஜைகள், இரவு 10:00 மணிக்கு மேல்.
அன்னபூரணி: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, சீதளாதேவி அலங்காரம்: சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி முதல்.
ராஜராஜேஸ்வரி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, காஞ்சி காமகோடி பீடம் முள்ளிப்பள்ளம் கிளை, கோ பூஜை, காலை 9:00 மணி, காமாட்சி அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.
அழகர் அலங்காரம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி.
ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, வெள்ளி தோளுக்கினியானில் சைத்யோசாரம், வடக்குமாசி வீதி வழியாக சன்னதி வந்தடைதல், இரவு 8:00 மணி.
ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, துர்க்கைக்கு பூஜை, காலை 7:30 மணி, பஜனை, ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், ஆரத்தி, புஷ்பாஞ்சலி, காலை 8:30 மணி, நவராத்திரி நாயகி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், மாலை 5:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி, கடஸ்தாபனம், இரவு 7:30 மணி.
சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பூஜை, காலை 6:30 மணி, நாமகீர்த்தனை, சின்மய ஸ்வராஞ்சலி குழுவினரின் இசை நிகழ்ச்சி, ஏற்பாடு: சின்மய தேவி குழு, மாலை 6:30 மணி.
கோயில் அனுஷ வைபவம் முன்னிட்டு சிறப்பு பூஜை: எஸ்.எம்.கே.திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம் மற்றும் வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை, இசைநிகழ்ச்சி: பாட்டு - ரங்கநாயகி, வயலின் - சச்சிதானந்தன், மிருதங்கம் - தியாகராஜன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
கருட சேவை வீதி புறப்பாடு: பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, கருட சேவை, காலை 9:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு திருநாவுக்கரசு திருத்தாண்டகம்: நிகழ்த்துபவர் - உமாராணி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் : நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
நவராத்திரி சிறப்பு வழிபாடு: லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.
ஆன்மிகமே,ஆனந்தமே - நவராத்திரி சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஆசிரியர் அழகுவேல், செல்வ விநாயகர் கோயில், டி.டபிள்யு.ஏ.டி., காலனி, திருப்பாலை, மாலை 6:40 மணி.
பள்ளி, கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்: மதுரைக் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: தன்னம்பிக்கை பேச்சாளர் ராமக்கிருஷ்ணன், தலைமை: முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன், முன்னிலை: முதல்வர் சுரேஷ், ஏற்பாடு: மதுரை கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம், காலை 11:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் கோவில்பாப்பாகுடி, கண்மாய்க்கரை, பள்ளி, கோயில் வளாகங்களை துாய்மைப்படுத்துதல், காலை 9:30 மணி, சமூக வலைதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம்: கருத்தாளர் - ராம்ஜி கம்பெனி நிறுவனர் ராம்சுதீர், ஏற்பாடு: செயின்ட் அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாலை 3:00 மணி.
அரசு உயர்நிலைப்பள்ளி, கொடிமங்கலம், உடற்பயிற்சி, காலை 7:00 மணி, கோயில் உழவாரப்பணி, காலை 9:30 மணி, அறிவியல் கலை குறித்த கருத்தரங்கள்: சிறப்புரை: ஆசிரியர்கள் சொக்கலிங்கம், மணிகண்டன், மதியம் 2:30 மணி, நீர் மேலாண்மை குறித்த கலந்துரையாடல், சிறப்புரை: ஆசிரியர் நாகேஸ்வரன், முத்துகன்னி, ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, இரவு 7:00 மணி.
சாமநத்தம், பொதுமருத்துவ முகாம், ஏற்பாடு: என்.டி.சி., மருத்துவமனை, காலை 9:30 மணி, சுயதொழில் பற்றிய கருத்தரங்கம்: சிறப்புரை: ஆசிரியர் தங்கமிதுனா, ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 2:30 மணி.
கோட்டையூர், எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்: சிறப்புரை: போப் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், ஏற்பாடு: கருமாத்துார் செயின்ட் கிளாரட் மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி.
ராஜாக்கூர், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: தலைமை: பள்ளிச் செயலாளர் பொன்னம்பலம், சிறப்புரை: ஆசிரியர் பிரியதர்ஷினி, காலை 9:30 மணி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்: சிறப்புரை: உடற்கல்வி ஆசிரியர் ஜெயச்சந்திரன், முன்னிலை: இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி, மாலை 3:00 மணி, ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி, மாலை 3:00 மணி.
மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம், எல்.கே.டி., நகர், யோகா என்பது ஒரு அறிவியல் கருத்தரங்கு: சிறப்புரை: உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜ்குமார், கனகரத்தினம், ஏற்பாடு: சி.புளியங்குளம் அரசுமேல்நிலைப் பள்ளி, காலை 9:30 மணி.
மணியஞ்சி, அலங்காநல்லுார், தலைமைப் பண்பு குறித்த கருத்தரங்கம்: தலைமை: பள்ளி இயக்குநர் பிரினிட்டா கல்யாணி, சிறப்புரை: உதவிப்பேராசிரியர் ஜெயச்சந்திரன், காலை 9:30 மணி, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்: தலைமை: ஆசிரியர் தங்கமாலதி, சிறப்புரை: சுற்றுசூழல் ஆர்வலர் கார்த்திகேயன், ஏற்பாடு: மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி, மதியம் 3:30 மணி.
பொதும்பு, மனிதம் காப்போம் - சிறப்புரை: பெத்சான் சிறப்புப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன், மண்வளம் காப்போம் சிறப்புரை: சமூக ஆர்வலர் சரவணக்குமார், மரக்கன்றுகள் நடுதல், ஏற்பாடு: செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி, காலை 9:30 மணி.
இரணியம் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகம், பராமரிப்பு, காலை 8:00 மணி, டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு குறித்த கருத்தரங்கம்: சிறப்புரை: ஆசிரியர் மருதமுத்து, ஏற்பாடு: மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00.
பொது தமிழ்மொழியில் பிறமொழி கலப்பு ஏன் - கருத்தரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், முன்னிலை: புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் வரதராஜன், ஆதிசிவம், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
25 வது இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள் குறித்த சிறப்புரை: கல்வி அலுவலர் நடராஜன், முழுமை ஆரோக்கியத்திற்கு இயற்கை குளியல்கள் குறித்த சிறப்புரை: சுவாமிஜி இயற்கை நல்வாழ்வியல் இயக்கம் இயக்குநர் கனகராஜ், பங்கேற்பு: செயலாளர் நந்தாராவ், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:00 மணி.
சங்க பொதுக்குழுக் கூட்டம்: நாகரத்தினம் மண்டபம், அவனியாபுரம் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் நாகரத்தினம், ஏற்பாடு: மதுரை வில்லாபுரம் அவனியாபுரம் தொழில் வர்த்தக சங்கம், மாலை 5:00 மணி.
சித்த மருத்துவர் துரைராஜின் நுால் வெளியீடு மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா: சித்த வைத்திய குருகுல மூலிகை ஆராய்ச்சி சங்கம், 4238 வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சித்தர்தெரு, மதுரை, நுால் வெளியிடுபவர்: குணசீலன், காலை 11:00 மணி.
திருக்குறள் திருப்பணிகள் தொடர் வகுப்புகள்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, பயிற்சியளிப்பவர்: பாவலர் கோ, ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித் துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
அறிவியல் திரைப்பட விழா: லென்ஸ் ஊடக மையம், லயோலா ஐ.டி.ஐ., வளாகம், ஞானஒளிவுபுரம், மதுரை, ஏற்பாடு: மறுபக்கம், லென்ஸ் ஊடக மையம், காலை 10:00 மணி முதல்.
இலவச மிருதங்கம், ஹார்மோனிய வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:00 முதல் மதியம் 3:00 மணி வரை.
'இளம் விஞ்ஞானிகள் இஸ்ரோவை நோக்கி' திட்டம் துவக்கம்: விமான நிலையம், மதுரை, ஏற்பாடு: மதுரை மிட்டவுன் ரோட்டரி கிளப், காலை 10:15 மணி.
மருத்துவம் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான ரேபிஸ் இலவச தடுப்பூசி முகாம்: கால்நடை பன்முக மருத்துவமனை, தல்லாகுளம், காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
விளையாட்டு 69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள்: மதுரை ரைபிள் கிளப், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, 14 வயது 17, 19 வயது ஆடவர் பிரிவிற்கான துப்பாக்கி சுடுதல் தேர்வு போட்டிகள், காலை 7:00 மணி.
க ண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.