/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / செப்.2 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / செப்.2 க்குரியது
ADDED : செப் 02, 2025 05:36 AM
கோயில் ஆவணி மூலத்திருவிழா: நரியை பரியாக்கிய லீலை, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:00 மணி, ஆவணி மூலவீதியில் அம்மன், சுவாமி தங்கக்குதிரையில் உலா, காலை 10:00 மணி, பதினாறுகால் மண்டபத்தில் சுவாமி, மாலை 6:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை.
வெங்கடரமண பாகவத சுவாமிகளின் மூல நட்சத்திர அபிஷேகம்: பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், திருமலை நாயக்கர் மகால் அருகில், மதுரை, இசைக்கச்சேரி: பாடுபவர்கள் - நீலாராவ், கிரிதர்லால், சந்திரசேகர், மிருதங்கம் - சுதர்சன், புல்லாங்குழல் - மனோகர், ஏற்பாடு: சவுராஷ்டிரா சபை, காலை 9:00 முதல் 10:30 மணி வரை.
பக்தி சொற்பொழிவு ராமக்கிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
பெரிய புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.
பள்ளி, கல்லுாரி 'தனித்தமிழும் கணித்தமிழும்': பயிலரங்க துவக்க விழா: செந்தமிழ் கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் ராணி லட்சுமி குமரன் சேதுபதி, முன்னிலை: முதல்வர் சாந்திதேவி, ஏற்பாடு: செந்தமிழ் கல்லுாரி, திருத்தேர் துாய தமிழ் மாணவர் இயக்கம், காலை 10:00 மணி முதல்.
பொது அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மதுரை பிரசார சுற்றுப்பயணம்: விவசாயிகளுடன் சந்திப்பு, ஜி.ஆர்.டி., ஓட்டல், மதுரை, காலை 10:00 மணி, ஏற்பாடு: அ.தி.மு.க., மேலுார் பஸ் ஸ்டாண்ட், மாலை 5:00 மணி, ஒத்தக்கடை, மாலை 6:30 மணி, புதுார் பஸ் ஸ்டாண்ட், இரவு 8:00 மணி.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை உயர்த்த வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, முன்னிலை: மாவட்ட தலைவர் பாரதி, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.
படிப்பிடை பயிற்சி நிறைவு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: வழக்கறிஞர் செந்தில்குமார், பங்கேற்பு: அல்ட்ரா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள், காலை 11:30 மணி.
திரிவேணி விழா: பகவத் கீதை பாராயணம், சிவபுராணம் சிறப்புத்தொடர் விரிவுரை: நிகழ்த்துபவர் - ததேவானந்தா சுவாமிகள், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, காலை 6:00 மணி முதல், என்.எஸ்.சுவாமிநாதனின் வயலின் இசைக்கச்சேரி, சிறப்புரை: தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி, மீனாட்சி நாயக்கர் மண்டபம், அம்மன் சன்னதி அருகில், மாலை 6:00 மணி முதல்.
கருத்தரங்கு: பிளாட் எண் எஸ்.எப்.2, இரண்டாவது தளம், பார்சன் சம்ருதி மஹால், பாத்திமா கல்லுாரி எதிரே, மதுரை, தலைப்பு: 'சொத்து மதிப்பீட்டில் ஜி.ஐ.எஸ்., அடிப்படையிலான விதிகள் உதவுவது எப்படி', பங்கேற்பு: பாலாஜி, ஏற்பாடு: இன்ஸ்டிடியூஷன் ஆப் வேல்யூவர்ஸ் - மதுரை கிளை, மாலை 6:30 மணி.
மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: இளங்கோ மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செனாய்நகர், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு மாவட்ட அளவிலான 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து மற்றும் ஹேண்ட் பால், ஹாக்கி, கபடி போட்டிகள், பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து, கால்பந்து போட்டிகள், கல்லுாரி மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள், பொதுப்பிரிவினருக்கான பேட்மிண்டன் போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான டென்னிஸ் போட்டிகள், ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி முதல்.